💖 Episode - 30 💖

987 46 61
                                    


காலையும் அழகாக மலர, உஷா எழமுன் எல்லா வேலைகளையும் செய்துமுடித்து, உஷாக்கு bed tea ஒன்றை ஊற்றி கொடுத்து எழுப்பினான் ஆதவன்.
" good morning, Usha" என்று.
"good morning ஆதவா" என்று சோம்பலை முறித்து கடிகாரத்தை பார்க்க, 9மணி.
"இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா??? என் phone" என்று தேடும்போது, ஆதவனின் pocket இல் இருந்து எடுத்து கொடுத்தான்.
" நீங்க இன்னைக்கு ஆபிஸ் போகவில்லையா?"
" இல்ல உஷா"
" ஏன்?? என்னாலயா?"
" இல்லடி உஷா. போய் வேல செய்ற அளவு வேல ஒன்னுமில்ல. Online ல பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லும்போது ஆதவனின் தொலைபேசி அலறியது. எடுத்துப்பார்க்க விழித்திரையில், "mom" என்று வந்தது.

இந்த நேரத்துல ஏன் call பண்றா? என்று யோசித்தப்படி அழைப்பிற்கு பதிலளித்தான் ஆதவன்.
" சொல்லுங்க அம்மா"
...................................
" அப்படியா?? ஏன் தீடீரென்று???"
...........................
"சரிம்மா. நாளைக்கே வர சொல்லுங்க. நாங்க இன்னைக்கே வர்ரோம்"
......................
" வைக்கிறேன்மா" என்று அழைப்பை துண்டிக்க ஆதவனின் முகமும் பிரகாசமாய் மலர்ந்தது.
இவ்வளவு நேரம் தலையை உடைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்ற பெரிய நிம்மதி ஆதவனிற்கு கிட்டியது. நான் நினைக்கிற போல உஷாட மனசு இப்படி அமைதியானால் நல்லம் என்று உஷாவிற்கும் தனக்கும் சேர்த்து ஏதாவது சமைப்போம் என்று தயாராகும்போது, உஷா குளித்து முடிந்து வந்தாள் சமையலறைக்கு.

"ஆதவா என்ன செய்றீங்க??"
" ஏதாவது சமைப்போம்னு பாக்குறேன்"
" நா சமைக்கிறேன்" என்று சொன்னபடி உஷா, ஆதவனின் அருகே வந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள். அவளது கூந்தல் காற்றில் அசைய ஆதவனின் முகத்தை சீண்டிக் கொண்டு இருந்தது.
கூந்தலின் வாசமோ அவனை மெய்மறக்க செய்து கொண்டு இருந்தது. கூந்தலின் ஓரத்தில் இருந்த நீர்துளிகளும் அவனின் மேலே வடியத் தொடங்கியது.
ஆதவனின் தொலைபேசியும் அலற, "இவ்வளவு நேரம் இருந்தும் ஒரு call வரல்ல, முக்கியமான நேரத்துக்கு call வரவேண்டியது" என்று முணங்கிக் கொண்டே போனான்.
கொஞ்ச நேரத்தில் காலையுணவும் தயாராக்கிய உஷா, ஆதவனை கூப்பிட அவனும் சாப்பிட வந்தான்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin