பின் இருவரும் சாப்பிட்டுவிட்டு வெகுநாளைக்கு பிறகு படமொன்றை DVD ல் பார்த்தனர். உஷா அடிக்கடி தன் தொலைபேசியை பார்த்து கொண்டே இருந்தாள். அரவிந்த்திடமிருந்து எந்தவொரு call உம் இல்லை. தொலைபேசி வீட்டுலன்னு சொன்னானே ஒரு வேள டிக்கெட் வெட்டவில்லையோ? Call பண்ணியும் பார்க்க முடியாது என்று அவளும் தன்னை தானே அளுத்துக் கொண்டாள். படம் பார்த்து முடியும் தருணமே, தன் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
"உஷா, திவ்யா (உஷாவின் அக்கா) இருவரும் ரெடியாகுங்க என் college mate, என்னுடைய நெருங்கிய நண்பன் சீனிவாசனுக்கு bypass ஆபரேஷன் பண்ணி இருக்காங்க. அவன பார்க்க போகலாம்" என்று உஷாவின் தந்தையும் சொல்ல,
" sorry அப்பா, எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. Husband வேலை விட்டு வரமுன் நான் வீட்டுக்கு போய்ரனும்" என்று திவ்யாவும் நழுவினார்." சின்ன change க்கு வெளியே போய் வரலாமே " என்று உஷாவின் தாயும் சொல்ல, அவளும் அறைக்குள் நுழைந்தாள். "I am going out. I will catch you later" என்று அரவிந்துக்கு ஒரு message யை Whatsapp இல் போட்டுவிட்டாள் உஷா. Last seen 10 நிமிடங்களுக்கு முன் என்று காட்ட, சற்றே கோபமும் வந்தது உஷாவிற்கு. பாரு இன்னம் ஒரு message கூட எனக்கு பண்ணாம offline போய் இருக்காரே என்று புலம்பிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள் உஷாவும்.
சின்ன wash ஒன்று எடுத்துவிட்டு, அலுமாரியில் தேடி, dark maron long சுடிதாரை தெரிவு செய்து iron செய்து உடுத்தும் கொண்டாள். Charm ஆன சிறிய works களுடன் அந்த சுடிதாரும், தெரிந்த bottom இன் சிறிய பகுதி சுறுக்குகளாலும், ஒரு பக்கத்திற்கு shawl யை விரித்து போட்டு, தலைமுடியை விரித்து இரு பக்கத்தாலும் கொஞ்சம் முடியை எடுத்து pin செய்து, சுடிதாருக்கு match ஆகின்ற பாதணிகளையும், purse ஒன்றையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் உஷா.
"உஷா. இன்னைக்குன்னா நீ செம்மையா இருக்கிற" என்று திவ்யாவின் பாராட்டை பெறவே, ஆம் என்று பெற்றோர்களும் ஆமோதித்தனர். அவர்களும் வந்துவிடவே, காரும் புறப்பட்டது. திவ்யாவை வீட்டில் இறக்கிவிட்டு, சில கணத்திலே சீனிவாசனின் வீட்டுக்கு முன் நின்றது கார்.
BẠN ĐANG ĐỌC
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Lãng mạnஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...