💖 Episode - 10 💖

1K 43 16
                                    


மௌனத்தை கலைக்கும் வண்ணம்,
"உஷா உஷா" என்று அரவிந்த் பேச மறுமுனையில் பேச்சே வரவில்லை. அதற்கு பதிலாக அவளது மூச்சு சத்தமே கேட்டது. உஷா தூங்கிட்டாள் போல, I love you, Usha என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் அரவிந்த்.
இப்படியே காலமும் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது. ஒரு மாதமும் ஆனது. தினமும் call அல்லது message என்றே நாட்கள் பறந்து சென்றன. அவளை பார்க்க விரும்பினால் காலேஜ் முடியும் நேரம் கேர்ட் அருகே நின்று கொள்வான். இல்லையென்றால் எதிர்ச்சையாக செல்வது போல அவளை பார்த்துக் கொள்வான். ஒரு போதும் ரேகாவிடம் அரவிந்த் உடன் தொடர்பு கொண்டிருப்பதை அவளோ மறைத்தாள். என் மனதை மாற்றி அரவிந்த் உடனான தொடர்பை துண்டித்து விடுவாளோ என்ற பயத்தினாலே. அரவிந்த் என்ற பெயராக save கூட பண்ணாமல், புனைப்பெயராக bestie என்று save செய்து கொண்டாள் யாருக்கும் சந்தேகம் வராதவாறு.

அதுவரை அரவிந்த் குடும்பம் பற்றி உஷா கேட்டதே இல்லை.
அன்றிரவு அவனாகவே, "உஷா, நாளைக்கு எங்க அம்மா அப்பா இறந்த நாள். நா முதியோர் இல்லத்துக்கு போய் பகலுணவு கொடுப்போம் என்று யோசித்து ஏற்பாடும் செய்து இருக்கேன். நீயும் வருகிறாயா???" என்று சொன்னதும் உஷாவிற்கு இடி தலையில் விழுந்ததுபோல இருந்தது.
" rest in peace" என்று மட்டுமே அவளுக்கு அந்த நேரம் வாயில் வந்தது.
"நா try பண்றேன் வர, ஆனா sure பண்ணாதே அரவிந்த் "
" நீ பக்கத்துல நாளைக்கு இருந்தா நல்லா இருக்கும் உஷா" என்றான் அவனும்.
"சரி அரவிந்த், உங்க அப்பா அம்மாக்கு என்ன நடந்தது?? எப்படி??? எப்போது??" என்று கேட்க, "நாளைக்கு வந்தா சொல்கிறேன் உஷா. கொஞ்சம் upset ஆ இருக்கு. வைக்கிறேன்" என்று அவன் சொல்லி துண்டிக்க முன்,
"அரவிந்த் கொஞ்சம் வா" என்று பெண்குரலின் சத்தமும் கேட்டது.
தினமும் இந்தப் பெண்குரல் கேக்குதே யார் இவள்?? என்று சந்தேகம் உஷாவிற்கு வந்தது. அம்மா தான் உயிரோடு இல்லை என்றானே. அப்போ????
என்னோடு இவன் உண்மையானவனாக, நம்பிக்கையானவனாக இருக்கானா?? என்று மனதும் ஏட்டிக்கு போட்டியாக பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தன.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ