💖 Episode - 13 💖

961 42 16
                                    


அரவிந்த்தோடு பேசிவிட்டு கட்டிலில் புரண்ட உஷாவிற்கோ தூக்கமே வரவில்லை. பல யோசனைகள் அவளை ஆட்கொண்டன. அதாவது அரவிந்த், குடும்பம், அவனது தொழில் பற்றியுமே. 2மணி 3மணி என்று நேரமும் சென்றது. ஒருவாறு தூக்கமும் மெதுவாக செல்லவே,

அது ஒரு மாலை 6மணி இருக்கும். வீதி எங்கும் மயான அமைதி. அந்த வீதியில் நடந்து கொண்டிருந்த எனக்கோ மனதில் பயமோ தொற்றிக் கொண்டது. பெரிய ஓர் இரைச்சல். அதாவது இரண்டு பெரிய கும்பலுக்கு இடையில் சண்டை. அடிதடிகள், கத்தி சண்டையும் கூடவே. எங்கும் இரத்த வெள்ளம்.. கதறும் அழுகுரல்கள். காதை மூடிக்கொண்டு தான் அழுகிறேன்.
"அம்மா..... அம்மா" என்று கத்தியபடி கண்களை திறந்து பார்த்தாள் உஷா. அவள் வீதியிலே இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். மாறாக கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தாள். வியர்த்து கொட்டியது உஷாவிற்கு. தொலைபேசியை தட்டி பார்க்க, அது 7மணி. என்ன இப்படி ஓர் கனவு? யாருக்கும் ஏதும் ஆபத்து வரப்போகிறதோ?? கடவுளே, எனக்கு புடித்தவங்களுக்கு ஏதும் நடந்துவிட கூடாது என்று மனதால் வேண்டிக் கொண்டபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

உஷாவின் தாய் தேநீரை கையில் கொடுக்க, "good morning அம்மா" என்று sofa வில் அமர்ந்து கனவை பற்றியே சிந்திக்கலானாள். தாயும் தந்தையும் தயாராகி போவதை கூட அவள் அறியவில்லை.
"உஷா நாங்க போய் வாரோம்" என்று காரில் தந்தை ஏறினார்.
"உஷா, என்ன இவ்வளவு நேரம் தேநீர குடிக்காம இருக்க??? are you okay??" என்று மகளை தட்டவும் தான் இந்த உலகிற்கு வந்தாள் உஷா.
"I am okay மா. கெட்ட கனவு ஒன்ற நினைச்சிட்டே இருந்தேன் அதான்"
"அதெல்லாம் யோசிக்காதே மா. அது சரி இன்னைக்கு காலேஜ் போற எண்ணம் இல்லயா??" என்றதும் கடிகாரத்தை பார்க்க, அது 7.45 யை காட்டியது.
"போகனும்" என்று மடமடவென்று ஆறிய தேநீரை பருகிவிட்டு, தாய் தந்தை செல்லும்வரை பார்த்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள் உஷா.
அவசரமாக குளித்துவிட்டு, முன்னைய நாள் iron செய்யவும் மறந்துவிட்டேனே என்று கைக்கு வந்த உடையொன்றை iron செய்தாள் யன்னலை நோக்கி பார்த்தபடி. வானமெங்கும் இருண்டு, சிலுசிலு என்று மழைத்துளிகள் மண்ணில் விழுந்து கொண்டிருந்தன.
"காலேஜ் போக தேவையில்லை என்று நினைத்தாலும் இன்னைக்கு என்னமோ revision இருக்கு என்று சொன்னாங்களே." என்று அவசரமாக தன்னை தயார்படுத்திக் கொண்டு, மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்து பையில் போட்டுவிட்டு, ஏதாவது miss ஆகிவிடக்கூடா என்று விறுவிறு என்று படியிலிருந்து இறங்கும்போது தாய் தந்தைக்கு கோல் செய்து safe ஆக போய் office க்கு சேர்ந்தார்களா என்று விசாரித்தும் கொண்டாள்.
கனவைபற்றியே இன்னும் ஓடிக் கொண்டே இருந்தது. அரவிந்துக்கு கால் செய்தாள். ஆனால் பொதுவாக காலையில் எத்தனை மணிக்கும் Answer செய்யும் அவனோ இன்று மாறாக தொலைபேசியை எடுக்கவில்லை காலேஜ் போகும் வரை அழைத்தாள் அவளும். Whatsapp ல் message, normal message களும் அனுப்பி பார்த்தாள். ஒன்றுக்கும் response இல்லை. Last seen அவளோடு கடைசியாக பேசிய நேரத்தையே காட்டிக் கொண்டு இருந்தது.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Onde histórias criam vida. Descubra agora