வேனானது சொந்தக்காரர் வீட்டின் முன் நிற்கும்போது தான் உஷா பாட உலகில் இருந்து நிஜ உலகத்திற்கே வந்தாள்.
கொஞ்சம் கதைத்து விட்டு, அந்த வீட்டில் உஷாவின் வயதை ஒத்த சகோதரியும், அவனுடைய சகோதரனும் இவர்களை அழைத்து செல்வதாக சொல்ல, சந்தோசத்துடன் விரைந்தனர்.முதலில் கூட்டிச் சென்று அந்த கோவிலை காட்ட, வாயை பிளந்தாள் உஷா ஏனென்றால் பல படிகளை கொண்ட உச்சியில் கோவிலொன்று சின்னதாக தெரிந்தது. இதில் ஏறி முடிக்க தன் உயிரும் போய்விடுமோ??? கட்டாயம் ஏற வேண்டுமா?? என்றும் உஷாவிடம் மனமானது கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தது.
"என்ன அண்ணி, பெரிய யோசன?? இதுல எப்படி ஏறுவோம்னா யோசன??" என்று கேட்க,
அவளும் ஆம் என்று தலையை ஆட்டினாள்.
"படியெல்லாம் பேசிக் கொண்டு போனா ஏறுவது விளங்காது அண்ணி, so come on" என்று அவளது கையை பிடித்து அழைத்து சென்றாள் ஸ்னேஹா.ஒருவாறு பேசியபடியே அரைவாசி தூர படியை அடைந்திருப்பாள் உஷா. தாகம் தன் நாக்கை உள்ளே இழுப்பது போல இருந்தது. எங்கும் சின்ன கடைகள் அல்லது tap சரி இருக்குதா?? என்று பார்க்கும்போது,
கீழ் படியில் ஒரு ஜோடி கையோடு கை பிடித்து பேசிக் கதைத்துக் கொண்டு வந்தனர். இருவரும் ஏதோ நகைச்சுவை பேசிக் கொண்டு இருப்பதாக அவர்களின் சிரிப்பு உணர்த்தியது.
இன்னொரு ஜோடி, பெண்ணின் செருப்பு அறுபடவே, தன் கணவன் அவனது செருப்பை கொடுத்து வெறும் காலோடு ஏறிக் கொண்டு இருந்தான், அதை போட்டுக் கொண்டு அவளோ தன் கணவனின் கரத்தை பிடித்தவண்ணம் இடை இடையே தன் கணவனின் பாதத்தை பார்த்து ஏதோ கேட்பது போலவும் விளங்கியது. இந்த ஜோடிகளை உற்றுப் பார்க்க, அதில் தன்னையையும், ஆதவனையையுமே கண்டாள் உஷா.
"அக்கா, என்ன அங்க அப்படி விழுங்குற மாதிரி பாக்குற?? யாரும் தெரிந்தவங்களா??" என்று சித்தியின் மகள் கேட்க,
கண்களை கசக்கி பார்க்க அது வேறு யாரோ.
சிரித்தபடியே ஒருவாறு கோவிலை அடைந்தனர்.
எல்லாரும் சுற்றி பார்த்துவிட்டு, உஷாவின் மனதில் ஒரு வேண்டுதல் எழவே, கண்ணை மூடி வேண்டிக் கொண்டாள். பின் மேலிருந்து பார்க்க கீழே சுற்றி பச்சைபசேலன வயல்களும், ஏதோ வெள்ளை கீறல்கள் போல அருவிகளும் ஓடிக் கொண்டிருந்தன. அதையெல்லாம் புகைப்படமாக்கி ஆதவனிற்கு அனுப்பி வைத்தும்போது whastapp இல் வந்த message யை திறந்து பார்த்தாள் உஷா.
" enjoy your small trip sweetie. Don't forget to send me a selfiee. Miss you "
என்று வந்திருந்தது.
இதனை அனுப்பி வைத்தவள், ஓரிரு selfiee களோடு, have a safe journey, miss you too என்று அனுப்பியும் வைத்தாள்.
ESTÁS LEYENDO
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...