💕 நீயே - 01 💕

1.5K 18 17
                                    


தொலைப்பேசி அலறும் சத்தத்திற்கு சமையலறையில் இருந்த கயல் ஓடி வந்தாள் ஏதோ எதிர்ப்பார்ப்போடு.
ஆனால்
விழித்திரையில் இருந்த பெயரை கண்ட அளவிற்கு ஏமாற்றத்தால் முகமோ சற்றே வாடத் தொடங்கியது.
நேரத்தை பார்க்க அதுவோ,
7மணியை காட்டியது.
இது என்னவனோடு பேசும் நேரமல்லவா?? என்று நினைக்கையில் கண்கள் குளமாகவும் செய்தது.
தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவள்,

"சொல்லுடா கௌத்தம்.. என்ன விஷயம்???" என்று கேட்டாள்.
"அடி, என்னடி பண்ற?? ஏதும் வேலையா?? நாளைக்கு வர ரெடியா??" என்று கரிசனையோடு கேட்டான் கௌத்தம்.
"சின்ன வேலை தான். பரவல்ல சொல்லுடா. என்ன விஷயம்.?? ஏதாவது டவுட்டா? " என்று கேட்க,
" இல்லடி. என்ன வர ரெடியாகிட்ட தானே..?? " என்றான் மீண்டும்.. அவளின் பதிலை எதிர்ப்பார்த்தவனாய்.
" ம்ம்ம்.. எல்லாம் ரெடி. ஆனா என்ட மனச தவிர.."
"அடி, அதெல்லாம் யோசிக்காதே.. நா இருக்கேனே.. நம்ம காலேஜ் வாழ்க்கைல்ல இதான் கடைசி கட்டம். கடைசி நாட்கள்... தேவையற்ற யோசனையை விட்டுட்டு வந்து சேருடி.."
" ம்ம்ம்.. பார்க்கலாம்.."
"என்ன டைம்முக்கு வர்ர?? யார் கூட வர்ர?? "
" காலைல்ல 4மணிக்கு வீட்டுல இருந்து வரனும். பஸ் 6மணிக்கு.. யார் கூட வர இனி..??
மேகலா, வாணி, சங்கீதா.. இவங்க கூட தான் வர இருக்கேன். ஆனாலும்... என்னால்ல..."
"கயல், என்னடி, மறுபடியும் புலம்ப ஸ்டார்ட் பண்றீயா?? அதெல்லாம் விடுடி.. உன் பக்கத்துல இருக்கிறவங்க கூட சந்தோசமா இருடி. இல்லாதவங்கள்ள நினைத்து வருத்தப்பட்டு உடம்ப கெடுக்காம"
" கௌத்தம்.. "
" சொல்லு கயல்.. "
" என்ட கடைசி எக்ஸாம்.. என்ன நடக்குமோ தெரியல்லடா. எனக்கு அங்க வந்து எழுதுற தைரியம் எனக்கில்ல. " என்று அவளது குரல் மாறுவதை கேட்டான் கௌத்தம்.

" எக்ஸாம்முக்கு முன்னால நாம காலேஜ் போகலாமே கயல். உன் கூட நா வர்ரேன். உனக்கு இருக்கிற கவல எல்லாம் என்கிட்ட கொட்டு. உனக்கு அழனும்னா என்கிட்ட அழுடி.. உன்ட மனசு சரிவரும்வர நாம அங்க இருக்கலாம்.. எக்ஸாமுக்கு முன்னால மனச சரி பண்ணலாம். கயல், எக்ஸாமுக்கு எத்தனையோ உதவிகள் எங்களுக்கு செய்து இருக்க. அதனால உன்ன கடவுள் கைவிடவும் மாட்டார்.. இதெல்லாம் யோசிக்காம நாளைக்கு வந்து சேரு கயல்..
வந்ததும் பார்த்து கொள்ளலாம். புரிதா?? யாரு இல்லன்னாலும் நா இருக்கேன். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுடி. உனக்கு கவலையா, அப்செட்டா இருந்தா எந்த நேரமும் கோல் பண்ணி பேசு.. புரிதா?" என்று கௌத்தம் கயலிற்கு ஆறுதல் சொல்லி,
விழுந்திருந்த அவளை கை கொடுத்து எழுப்பினான்..
இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமன்றி..
பல இன்னல்களும் கூடவே...

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now