💕 நீயே - 10 💕

169 14 14
                                    


"கௌத்தம், ரொம்ப தேங்க்ஸ். சாப்பாடு நல்லா இருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு நாக்கிற்கு ருசியான சாப்பாடு சாப்பிட்டேன்டா. நீ இன்னைக்கு தந்து இருக்காட்டி நா ரொம்ப மிஸ் பண்ணிருப்பேன்.
இறால் பொறியல் வேற லெவல் டா..
நா சங்கீதா கூட கூப்புடல்ல. ரேணுவ மட்டும் கூப்பிட்டு சாப்பிட்டேன்..

ஒன்னு தெரியுமா கௌத்தம்?? நானும் ராமும் பழகி 2வருஷம். ஆனா இதுவர ஒரு தடவ சரி சாப்பாடு கொண்டு வந்து தந்தில்ல. நானே வாயால கேட்டும் கொண்டு வந்து தந்தில்ல.
ஒருதடவ எனக்கு கொண்டு வந்ததையும் அவன்ட கூட்டாளிமார்கள் எடுத்து சாப்பிட்டாங்களாம்.
ஆனா அதுக்கு நீ, உன்ட பேக்கை யும் உன் நண்பர்கள் அவன்ட நண்பர்கள் மாதிரி தானே தேடுவாங்க. ஆனாலும் அந்த போராட்டத்துக்கு மத்தில கொண்டு வந்து தந்தீயே.. அதான்டா முக்கியம். பொறுமதிமிக்கது. உன்னையும், ராமையும் அருகில் கூட வைக்க முடியாதுடா " என்றாள் கயல்.

அப்படியே கடைசி எக்ஸாமும் வந்தது.
அன்று கயலுக்கு அருகில் கௌத்தம். ஆனா அது அவர்களது இரண்டாம் வருடத்தில் செய்த எக்ஸாம் அது. ரிசல்ட்டின் தரத்தை உயர்த்துவதற்கான எக்ஸாம்.
அதற்கு முன் நாள் இன்னொரு எக்ஸாம் கயலிற்கு இருந்ததால் ஒழுங்காக படிக்க முடியவில்லை.
அருகில் இருந்த கௌத்தம் கயலை பார்த்து,
"கொஞ்சம் காட்டேன்" என்று கேட்டான். மொத்தம் ஐந்து வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.
கயல் எழுதிய விடைகளை சேர்த்தால் 2வினாக்களுக்கு தான் விடை இருந்திருக்கும். அதுவும் செய்தது சரியா தவறா என்று கூட அவளுக்கு உறுதி இல்லை.
அப்படி இருக்க, எப்படி கௌதமிற்கு காட்டுவேன் என்று சுமாராக பேப்பரை  காட்டிவிட்டு பேசாமல் இருந்துவிட்டாள்.

எக்ஸாம் முடிந்ததும், வழமையை போல கௌத்தம் கயயோடு பேசிக் கொண்டு இருக்கும்போது,
"எழுதுவதற்கு நீ உதவி செய்யவில்லையே.. என்னடி கொஞ்சம் கொப்பி பண்ண விடமாட்டீங்களா??" என கௌத்தம் சொல்ல,
வேண்டுமென்று செய்யலடா. உனக்கு படிப்பித்த பாடங்கள்னா சொல்லி தந்து இருப்பேன். நானே படிக்கல்லடா... "
என்று உண்மையை சொன்னாள். ஆனாலும் கௌத்தமிற்கு நீ காட்டி இருக்க வேண்டும். இதற்கு முன்னர் எத்தனையோ தடவ காட்டு என்று கேட்டு இருந்தாலும், இந்த தடவை காட்டாதது மனதிற்கு ஏதோ போல் இருந்தது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now