💕 நீயே - 38 💕

135 13 6
                                    

" எதுக்கு அக்கா இதெல்லாம்??" என்று வினவ,
" நானும் புதுச தான் அவங்க பார்க்க வர்ரன்னு உடுத்தேன். நீயும் அதுமாதிரி உடுக்கனும்னு ஆசப்பட்டேன். கடைக்கு பிள்ளைகளோட போய் வாங்கிட்டு வர முடியாதே.. அதான் ஆன்லைன் பிஸ்னஸ் செய்ற என் நண்பிட்ட கேட்டு வாங்கினேன்.." என்றாள் கயல்.
செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணது இவர் தான் என்று தன் கணவனை காட்டினாள் அவள்.
அப்படியே பேசிவிட்டு, சாப்பாட்டையும் உண்டுவிட்டு, எல்லாவற்றையும் க்ளீன் பண்ணாள் கயல்.
எல்லா வேலைகளையும் முடித்து, டீ கோப்பையோடு வந்தாள் கயல்.
" என்னங்க, இந்தாங்க டீ.. " என்று லெப்பில் வேலை செய்து கொண்டிருந்த தன் கணவனிடம் கொடுத்தாள்.
பெரிய யோசனையுடன் அமர்ந்து கொண்டிருந்த கயலின் தங்கையை கண்களால் கயலிற்கு கௌத்தம் காட்ட,
" என்னடா சாவித்ரி பெரிய யோசன??" என்று அவளை தன்னிடம் அழைத்தாள் கயல்.

"அவங்க வீட்டால வந்து என்ன சொல்வாங்க??" என்ற பயம்.. என்று சொல்ல,
கயலும் கௌத்தமும் முகத்தை முகம் பார்த்தனர்.
" இதுவெல்லாம் ஒரு விஷயமா?? வர்ர ஆக்கள் உனக்கு தெரியாத ஆக்களா?? உன்ட லவ்வர்ம் அவர்ட குடும்பமும் தானே.. அவங்க கூட பார்த்து, பேசியும் இருக்கிற தானே."
" நீங்க என்ன சொன்னாலும் எனக்கு பயம்" என்று அக்காவின் கையை இறுக்கி பிடித்தாள் சாவித்ரி.
"என்ன? என்ட வாழ்க்கைல்ல நடந்தது உன்ட வாழ்க்கையில்லயும் நடக்கும் என்ற பயமா?? சாவித்ரி..
அப்படி ஒன்னும் நடக்காது. தைரியமா இருடா..
குடும்பம் எதிர்த்தாலும் தனக்கு வேணுமென்று ராம் புடிவாதம் பிடித்திருந்தா நடந்து இருக்கும்.. ஆனா கௌத்தம்ம பாருடா..." என்று கதையை சாவித்ரிக்கு சொல்ல ஆரம்பித்தாள்.

எங்கட காதல் ஆரம்பித்து மிச்ச நாள். ஆனாலும் ஒத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொள்ளவே இல்லை. ஆனா அன்று எதார்த்தமா கௌத்தம் ஹெயார்போர்டில் கண்ட நேரம். உதடுகள் மனதில் உள்ளவற்றை உளரிற்று.
ஆனா சாவித்ரி எனக்கு இத வீட்டுல சொல்ல தைரியம் இல்ல.
ஏற்கனவே ராம் பாடத்துல நல்ல பாடம் படித்து முடிந்தாகிவிட்டு,
அதே மாதிரி இன்னொரு பாடமா??
அதாவது,
" சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது.. ஆனா நா மீண்டும் நாடினேன்.. இந்த தடவ சூடு படாது என்ற நம்பிக்கைல்ல தான்.. "

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now