💕 நீயே - 41 💕

186 10 0
                                    

அப்படியே காலம் போக,
கயலிற்கு 7 மாதங்கள்...
கௌத்தம் கிட்ட கயல் தனக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்டா.. எனக்கு ஆசையாக இருக்கு.. என்று சொல்ல  முடியாமல் இருந்துவிட்டாள்.
ஆல்ரெடி தன் கணவனிற்கு எவ்வளவு சிரமம்?? இன்னம் அவன ஏன் சிரமத்துக்கு உள்ளாக்கனும்?
தாய் நாட்டுல இருந்தா கட்டாயம் அம்மா, கௌத்தம்ட அம்மா எல்லாம் சேர்ந்து செய்திருப்பாங்க.
தலை பிரசவம் வேற..
"ஆனா கவலைப்படாதே குழந்த. உன்ட அப்பா உனக்காக எவ்வளவோ பண்றாரு..  அதெல்லாம் நினைத்து சந்தோசப்படலாம்." என்று வயிற்றை தடவியபடியே சொல்ல,
சரி அம்மா என்று பதிலுக்கு உதைவிட்டது.

அன்று,
கௌத்தம் ஆபிஸ் விட்டு வரும்போது கயலிற்கு அழகான சாரியொன்றை வாங்கி வந்தாள்.
இதுவரை அவள் அணிந்திராத ஓரஞ்சு-மஞ்சள் கலரை கொண்ட பட்டு சாரி அது. அழகான வேலைப்பாடுகளுடன்..
" என்னங்க, என்ன சாரி எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்க?? என்ன ஸ்பெஷல்???" என்று கேட்க,
" கயல், என் ஸ்டாப் ஒருத்தருக்கு கல்யாணம். நாளை இரவுக்கு. ஆனா மாலைல்லயே வர சொன்னாரு. என்னோட நல்ல நெருங்கிய பழக்கம் வேற.. உன்னையும் கட்டாயம் கூட்டிட்டு வரட்டாம்.. அதனால தீம் கலர் பொருந்துரமாதிரி வாங்கிட்டு வந்தேன்.
நல்லமா டியர் பொண்டாட்டி??? " என்று கேட்டான் கௌத்தம்.

" ஆம் புருஷா, நல்லா இருக்கு.. உன் செலக்ஷன் எப்படி சர்லாம போகும்??? அதுவும் நானே உன்ட பெரிய நல்ல செலக்ஷனே" என்று
கண்ணடித்தவள்,
" ஆனா எனக்கு இதெல்லாம் உடுக்க ஒரு மாதிரி இருக்குங்க. அவ்வளவு நேரம் உடுத்துட்டு எல்லாம் இருக்க முடியாது. அலட்டியா இருக்கும். நா பேசாம வீட்டுலயே இருக்கேனே.. " என்று சொல்ல,
" என் தங்கமே, உனக்கும் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் இருக்கும்?? அதோட வர்ரவங்க எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆக்கள்.. பேசிட்டு இருந்தா உனக்கும் நல்லமே. கட்டாயம் போக வேண்டிய கல்யாணம் கயல். உனக்கு அப்படி அலட்டின்னா உடனே வந்து விடலாம்.. " என்றான் கௌத்தம்.
"சரி இவ்வளவு கௌத்தம் ஆசைப்பட்றானே.. " என்று அவளும் சம்மதித்தாள்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now