💕 நீயே - 28 💕

116 11 6
                                    

கடிகாரத்தை பார்க்க 4மணி.
"இப்போ போனா தான் 6மணிக்கு முதல்ல போகலாம் கயல் " என்றான்.
"கௌத்தம்.."
" சொல்லுடி"
" நீ தானே எனக்கு வெலன்டைன் டேஸ்ல கிப்ட் அனுப்பினது???" என்று கேட்க,
" ஆம்" என்று ஒத்த சொல்லில் பதில் சொன்னான்.
"அதற்கென்ன அர்த்தம்டா??" என்று கயல் கேட்க,
" அது வந்து...." என்று உதடுகள் இழுக்க,
" எப்படி கயல் சொல்வேன்? ரம்யாவ லவ் பண்ணும்போது உன் மேல க்ரெஷ் என்று எப்படி சொல்வேன்டி? அந்த சின்ன புற்றுகாயம் தான் இப்போ பெரிதாகி வெடிக்க அன்ன இன்னன்னு இருக்குது.
கயல், ரம்யா விட்டு போனதும் உனக்கு என்ட லவ்வ சொன்னா நீ என்னடி நெனப்ப?? என்ன தப்ப நினைப்பீயே.. அதனால தான் பேசாம இருக்கேன். இல்லன்னா உன்ட பேர்த் டே என்று உனக்கு ப்ரொபஸ் பண்ணி இருப்பேன்டி. ஆனா எனக்கு சின்ன பயம்..
நீ என்ன சொல்வீயோ... தெரியல்லடி. உனக்கு என்ன இஷ்டம் மாதிரி தான் விளங்குது. ஆனாலும் ஏதோ பயம் டி" என்று மனம் சொன்னது.
" என்னடா அது வந்து இது வந்துன்னு இழுக்குற?? " என்று கயல் மீண்டும் அவனது பதிலை எதிர்ப்பார்த்தபடி கேட்க,
" ஏன்டி நா கிப்ட் தந்தது தப்பில்லையே.. ஏன் வெலன்டைன்னு சொல்றது லவ்வர்ச்கு மட்டுமா, ஏன் அதே அளவு நேசிக்கிற நண்பர்களுக்கு கொண்டாட முடியாதா???" என்று சொன்னான் கௌத்தம்.
" அடேய் கௌத்தம் இந்த டயலொக் நா உனக்கு போன வருஷம் அனுப்பினது. என்னமோ அவர்ட சொந்த டயலொக் பேசுற மாதிரி பேசுறீயே... " என்று செல்லமாக தட்டினாள் கயல்.

" ஆனா, நீ எந்த அர்த்தம்ல தந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோசம்டா.. ஏன்டா என் வாழ்க்கைல்ல இதான் கிடைத்த முதல் வெலன்டைன் கிப்ட்ச். போன முற ராம்கிட்ட விஷ் கேக்கவே ரொம்ப கஷ்டப்பட்டேன். சல்லி இல்லாம மனசால கூட விஷ் பண்ணி என்ன சந்தோசப்படுத்தனும்னு கூட அவனுக்கு தோனல்ல. எங்கடா விஷ் என்று கேட்பேன். அதன் பிறகு தான் அனுப்புவான். அதுவும் சிலவேள்ள.. " என்றாள் கௌத்தமை பார்த்தபடி.
" ரம்யாக்கு இந்த முற குடுக்கல்லயா? " என்று கயல் கேட்க,
" அவ்வளவு பிரச்சினைல்ல கொடுக்கனும்னு தோனல்ல. கொடுத்து அவளை இன்னம் உசுப்பேத்தி விட்டு போகவும் மனசில்ல. " என்றான்.
" இதுவர அவளுக்கும் இப்படி கிப்ட்... கொடுத்து இருக்கியா? "
" இல்லடி, அவளுக்கு கொடுக்க சந்தர்ப்பம் இல்ல. அவள்ள கல்யாணம் கட்ட முத அவ வீட்டுக்கு போறதில்ல. யார்ட கைலயும் கொடுக்கவும் முடியாது. கொடுத்தாலும் முதல்ல ரம்யாட அப்பாதான் பிரித்து பார்ப்பாங்க. அதனால இப்படி கிப்ட் பண்ணதில்ல" என்றான் கௌத்தம்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now