💕 நீயே - 37 💕

142 10 5
                                    


வீட்டை அடைந்த கௌத்தம்,
"கயல்.. கயல்" என்று அழைத்தபடி உள்ளே செல்ல,
கௌத்தமின் சத்தத்தை கேட்ட கயல், அறை கதவை மூடிவிட்டு,
உதட்டில் கைவைத்து,
"உஷ் உஷ்" என்று சொல்லியபடி வந்தாள் கயல்.
" என்னங்க?? ஏன் இவ்வளவு சத்தம்?? எழில்ல கஷ்டப்பட்டு தூங்க வைத்தேன்டா" என்று கேட்டாள்.
அவளை ஹாலில் இருக்க வைத்து, டாக்டர் சொன்னதையெல்லாம் சொன்னான் அவன். கௌத்தமை விட சந்தோசப்பட்டது கயல் தான். ஏனென்றால்
கௌத்தம் சொல்லும்போது அவன் கண்களிலும், முகத்திலும் சந்தோசம் இருந்ததை காண கயலிற்கு இன்னும் சந்தோசம் பெருகியது.
" ரொம்ப தேங்க்ஸ் டி. எல்லாத்துக்கும்.." என்று கயலின் கையை தன் கைக்குள் சிறைப்பிடித்தான்.
அவர்களை தாண்டி அம்சவேணி சென்று கொண்டிருந்தாள்.
பத்திரிகை பார்த்துக்கொண்டு கயலின் தந்தை நின்றார்.
சுற்று முற்றும் கௌத்தம் பார்த்து,
அவளது புறக்கையில் முத்தமிட்டு,
" ஐ லவ் யூ, கயல் " என்றான்.
குங்குமமாய் சிவந்தாள் அவள்.

மிக்க சந்தோசத்தோடு கயலோ, கௌத்தமோ இருந்தால் தான் "ஐ லவ் யூ" என்று சொல்லிக் கொள்வதுண்டு. கௌத்தமின் வாயால் கேட்க வேண்டும் என்றால் சிலவேளைகளில் புடிவாதம் பிடித்து கயல் கேட்பதும் உண்டு. ஆனால் கௌத்தமே நினைத்து சொல்வது அரிது. அப்படிப்பட்ட சந்தர்ப்பமல்லவா இது..??

" ஐ லவ் யூ டூ, கௌத்தம்.." என்று சொல்லிவிட்டு " புருஷா.." என்று மாற்றினாள் கயல்.
" நீ இவ்வளவு பயம் கூடாது பேபி.." என்று சிரித்தான் அவன்.
" என்ன செய்ய?? நண்பனா நீ இருக்கும் போது கௌத்தம் என்று பேசி பேசி பழகிற்று. கல்யாணம் சரி வந்த பிறகு அம்மாட காதுல கௌத்தம்னு உன்ன கூப்பிட்டத கேட்டு நல்லா வாங்கி கட்டினேன்.
"என்ன கயல், இப்படியா புருஷன்ன கூப்பிட்றது?? மரியாத இல்லாம பெயர் சொல்லி?? இத கேட்டா அவங்க அம்மா, அப்பா என்ன நினைக்க கூடும்?? இனி இப்ப சொல்ல கூடாது.." என்று எச்சரித்தாங்க. அதன் பிறகு தான் இந்த பேபி, என்னங்க, ஏய், தங்கம்.. எல்லாம் சொல்லி உன்னை கூப்பிட்றேன்" என்றாள் கயல்.

" புருஷா.. நீ இப்ப சொன்னதும் ஒன்னு நினைவுக்கு வருது"
" என்னடி??"
" முதல்ல ஹெயாபோர்ட்ல நம்ம காதல்ல சொன்னோம். அதன் பிறகு கல்யாணம் செய்து உங்க ஊருக்கு வந்த நேரம்... "என்று சொல்ல, இருவரும் இறந்தகாலத்திற்கு சென்றனர்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now