💕 நீயே - 12 💕

163 14 9
                                    


அந்த கிப்டுக்கு நன்றி சொல்லும் போது,
சங்கீதா பேசவே இருவரும் விரைந்தனர்.
நால்வரும் பஸ் ஸ்டாப்பில் நிற்க,
உடனே பஸ் வந்தது.
பஸ்ஸில் ஏறி பார்க்க, நெரிசல்.. என்றாலும் அங்கு மூன்று சீட்கள் மட்டுமே இருந்தன.
சங்கீதாவும், பாய் பிரண்டும் ஒன்றாக உட்கார, கயலை அடுத்த சீட்டில் அமரவைத்த கௌத்தம்,
அவளது பக்கத்தில் கம்பியை பிடித்துக் கொண்டு நின்றாள் கௌத்தம்.
அதற்குப் பிறகு எவ்வளவு சீட் கிடைத்தும் கௌத்தம் போகவே இல்லை.
"இவ்வளவு நேரமா நின்னுட்டு வர்ர. போய் உட்காரேன்" என்று கயல் வேண்டிக்கொள்ள,
"நீ யன்னலோரத்தில் அமர்ந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனா இந்த சைட்ல உட்கார்ந்து இருக்க. இந்த நேரம் வேற கெட்ட நேரம்.. குடிகாரன், அவன் இவன் எல்லாம் ஏறுவாங்க. அதனால உன்ட சேப்டிக்காக பக்கத்துலே இருக்கேன்" என்றான்.

அதே நேரம், பஸ்ஸின் வானொலியில்,
நானும் நீயும் என்ற பாடல் இமைக்கா நொடிகள் படத்தில் இருந்து ஒலிபரப்பானது.

உன் தேவையை நான் தீர்க்கவே
வெண்ணீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

பாடல் வரி போகும்போது, உண்மையான அர்த்தத்தை கௌத்தமிடமிருந்து கயல் அறிந்து கொண்டாள்.

உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்

என்ற பாடல் வரிகளை கேட்க, கௌத்தமிற்கு கயல் கடற்கரையில் அழுதது நினைவுக்கு வந்தது. உண்மையாகவே அவனது நெஞ்சு வலித்தது.

அன்று...
ராமும், கயலும் ஒரு தடவை பஸ்ஸில் போனர். அந்த நேரம் இருவருக்கும் பக்கத்து பக்கத்து சீட் கிடைக்கல்ல. கயலின் இந்த பக்கம் என்றால் ராம் மற்ற பக்கம். கயலிற்கு முன்னால்.
யன்னலோரம் இல்லாமல் மற்ற ஓரம் வேற.
ஆனால் ஒரு தடவை, இரண்டு தடவை கயல் கூப்பிட ராம் திரும்பினானே தவிர.
அவனாகவே திரும்பி பார்க்கவே இல்லை. மாறாக ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டும், படம் பார்த்துக் கொண்டும் இருந்தான்.
தன்னவளை அப்படியா பார்த்துக் கொள்வது என்று அந்த நேரம் சற்று கவலையும் அடைந்தாள் கயல்.
இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும் அவளுக்கு ராம் எப்படியும் பொருத்தம் அற்றவன் என்று விளங்கிற்று.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now