💕 நீயே - 08 💕

171 13 11
                                    

முன் கேர்ட்டிற்கு அருகில் இறக்கிவிட்டான் கௌத்தம். கயலின் இரண்டு முழுகரங்களும் 100அம்பியர் கொண்ட கரன்ட்டை பாய்ச்சிக் கொண்டு இருந்தது.
காலேஜிற்கு முன்னால் இருந்த ரெஸ்டாரன்ட்டிற்கு கயலை அழைத்துச் சென்றான்.
"பிரியாணி ஓகேயா??" என்று கௌத்தம் கேட்க, சரி என்று தலையை ஆட்டினாள் கயல்.
பிரியாணி பார்சல் இரண்டு தருமாறு கடையில் வேண்டி, ஒன்றை கயலிற்கு கொடுத்தான். கயல் எவ்வளவு காசு கொடுத்தும், கௌத்தம் வாங்கவே இல்லை..

கடையில் இருந்து வெளியேறிய கௌத்தம்.
"அடி கயல், ஒன்னும் நினைக்காதே உன் கூட இந்த ரெஸ்டூரன்ட்ல சாப்பிடல்லன்னு. உட்கார்ந்து சாப்பிட ரெஸ்டூரன்ட்டுக்கு வெளிய தான் இடம் இருக்கு. அதனால தான் விரும்பல. அந்த ரோட்ல போறவங்க, வாரவங்க எல்லோரும் உன்ன பார்ப்பாங்க. நீ ஒழுங்கா சாப்பிடவும் மாட்ட.. " என்றான்.
கௌத்தமின் மனதையும், எண்ணத்தையும் நினைத்து, அகம் மகிழ்ந்தாள் அவள்.

அப்படியே பேசிக் கொண்டு போக,
அந்த காட்டில் அழகிய சிவப்பு, மஞ்சள் கலந்த ரோஜாவை கண்டு வாயை பிளந்தாள்.
" வாவ்... இந்த காட்டு மரங்களுக்கு இடைல்ல இவ்வளவு அழகான பூவா?? " என்று அவளை அறியாமலே சொன்னாள்.
" என்னடி???"
" இல்ல, அழகான ரோஜா பூ ஒன்னு." என்று கௌத்தமிற்கு காட்டினாள்.
உடனே சைக்கிளை நிப்பாட்டி,
அவள் காட்டிய இடத்திற்கு செல்ல முனைந்தான்.
"டேய். போகாதே. அதுல நிறைய முள்ளு மரங்கள் இருக்கு. கால்ல, கைல்ல கீறிபடும். " என்று கயல் சொல்ல,
"அடி, இத விட பயங்கரமான காட்டுகள்ள நா போய் இருக்கேன். பயப்படாதே.. என் முன்ன நீ ஆசப்பட்டது இது தானே முதல் தடவ.." உடனே பறித்து வந்து கொண்டு இருந்தான்.

அவனை நோக்க,
கடும் பச்சை நிற நீட்ட கை சேர்ட் அணிந்து, அதனை முழங்கையிற்கு மடித்து,
தன் நிறத்தை விட சற்று கடுமையான நிற டெனீம் அணிந்து இருந்தான்.
அவனது சிறிய கண்கள் வேல்களை போல கூர்மையாக அவளை வெட்டிக் கொண்டு இருந்தன.
புருவங்கள் சற்றே தடித்து,
முடி சாதாரணமாக வளர்ந்திருக்க, நேற்று தான் சவரம் செய்தது போல இருந்தது அவனது தாடி.
கௌத்தமின் ஆண் கம்பீரம் அவனது மீசை ஓரத்தில் முறுக்கி காட்டிக் கொண்டு இருந்தது.
அவனது மெல்லிய புன்னகையால்  கயல் தன்னை அறியாமலே பறி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
கயல் அருகே வந்தவன்,
"கயல், உன்கிட்ட ஒருவிஷயம் சொல்லனும். ஆனா இந்த இடத்துல, இப்படி சொல்லனும்னு நினைக்கல்லடி. ரோஜா கொண்டு வந்து உன்கிட்ட சொல்லனும்னு இருந்தேன். ஆனா உனக்கு எல்லாத்துக்கும் அவசரமே..
அழகான இடத்துல, அழகாக சொல்ல இருந்தேன்.
ஆனா என்ன பண்ண?? இப்போதைக்கு இத வெச்சி எஜச்ட் பண்ணிக்கோ.." என்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்காத வண்ணம் முழங்காலில் அமர்ந்து,
" ஐ லவ் யூ கயல்.. வில் யூ எக்செப்ட் மீ?? வில் பீ மை லவ்?? "
என்று வினவ,
கயலிற்கு தலை கால் புரியவில்லை.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now