💕நீயே - 14 💕

165 14 10
                                    


கண்களை திறக்க,
யாரோ பின்னால் இருப்பது போல புரியவே,
திரும்பிப் பார்த்தாள் கயல்.
கௌத்தம் பொதுவாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்திருந்தான்.
எல்லாம் மாயை என்று திரும்பிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் கயல் அருகே வந்த கௌத்தம்,
"என்னடி, பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க??" என்று கேட்க,
அவனது கையை மெதுவாக கிள்ளிப் பார்த்தாள்.
"ஆவ் ஆவ்... ஏன் டி கிள்ற??" என்று கௌத்தம் கேட்க,
"இல்ல, மாயையா?? இல்லன்னா ரியல்லான்னு செக் பண்ண தான்.." என்றாள் பல்லை ஈஈஈஈ என்று காட்டி இளித்தபடி.
"அதுக்கு உன்ன கிள்ளிப்பாரேன். ஏன்டி என்ன கிள்ளின?? " என்று பாவமாக கேட்க,
"எனக்கு கிள்ளினா வலிக்குமே.. அதான் உனக்கு கிள்ளி பார்த்தேன். கொஞ்ச நாள்ள உன்ன எல்லா இடத்துலையும் காண்றேன். சிலவேள மாயை.. அதான் இப்படி செக் பண்றேன்.." என்று சொன்னாள் புத்தியாய்.
"அடியேய், நீ எல்லாம் வேற லெவல் டி. நல்லா வரணும். அதுசரி அப்படி என்ன எல்லா இடத்துலையும் காண்றன்னா அதுக்கு ஒரு பெயர் இருக்கே?? அப்படி காண்றன்னா.. உன்ட ஆழ்ந்த மனசுல நா இருக்கனும்... " என்று கதையளந்து கௌத்தம் வரவே,
சற்றே வெட்கமடைந்து,
"டேய், அப்டி ஒன்னுமில்ல.. இந்த க்ளாஸ்ஸ நினைவு இருக்குதா??? " என்று கேட்டாள் கதையை மாற்றும் எண்ணத்தில்.

" இன்னைக்கு என்கிட்ட இருந்து, என்ட கேள்வில இருந்து தப்பிக்கலாம். ஆனா ஒருநாள் என்கிட்ட வசமா மாட்டுவாய் டி. எனக்கும் உன்ன அடிக்கடி கண்டுபடுதே என்று எப்படி சொல்வேன் லூசு?? " என்று கயலின் தலையை தடவி விட்டான்.
"ஆம்டி. இது நம்ம க்ளாஸ்.. லெச்சர்ஸ் ஹால்.. "
" எங்களுக்கு இதுவர படிப்பித்த ப்ரொபஸ்கள்ள நினைவு இருக்கா???"
என்று ஒவ்வொரு ப்ரொபஸ்களின் பெயர்கள் நினைவு இல்லை என்றாலும், அவர்களுக்கு செல்லமாக வைத்த பெயர்கள் நினைவில் இருந்தன.

"டேய், கௌத்தம் உனக்கு அந்த சேர்ர நினைவு இருக்குதா?? "
" வாத்து மாதிரி நடந்துட்டே பாடம் சொல்லி குடுப்பாரு. "
" ஆம்டா. ஆனா அந்த மனுசன் ரொம்ப நல்லவரு. பிள்ளைகள்ள பத்தி யோசிப்பாரு. பேப்பர்ட மொடல்லையும் சொல்லி, கேள்வி இப்படி தான் சொல்வாரு.. அந்த பாடத்துல தான் பைல் ஆகுறது குறைவு. ஆனாலும் அவர்கிட்ட ஒரு தடவ போய் பல்ப்பும் வாங்கினேன்டா.." என்றாள் கயல்.
" அது உண்ம தான். நல்ல சேர். எனக்கும் அவர ரொம்ப புடிக்கும். உனக்கு அந்த நெட்டக்கொக்கு சேர்ர நினைவு இருக்கா?? "
" யாரது??? லெச்சர்ஸ்ஸுக்கு வரவே மாட்டாரு. வந்தாலும் 40நிமிஷத்துல 10நிமிஷம் தான் படிப்பிப்பாரு. பொதுவான ஏதாவது விஷயத்த உளரிட்டு இருப்பாரு. அவர் படிப்பிக்கிறது கூட ஒன்னுமே புரிரதில்ல"
" ஆம் டி. அவர் என்ன எழுதுராதுன்னு தெரியாம நாமளும் எழுதுறது. எக்ஸாமுக்கு படிக்கும்போது தான் என்ன எழுத்து, என்ன குறியீடுன்னு யோசிப்போம்.. " என்றான் கௌத்தம்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now