💕 நீயே - 36 💕

150 10 12
                                    


"கௌத்தம்.. மகனே.." என்று அவனின் தாய் ஆனந்த கண்ணீரோடு வந்து கட்டியணைத்தார்.
பிறகு தன் அம்மாவை விலத்தி பார்க்க,
கௌத்தமின் அப்பா ராஜாவாக நின்றிருக்க அதனை கண்டு அவனின் கண்கள் கலங்கியது.
ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான் கௌத்தம்.

5 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார்?? என்று நினைக்கையில் மீண்டுமொரு தடவை இதயமே நின்று விடும் போல இருந்தது.
அன்று பல இன்னல்களை முகம்கொடுத்து தன் தந்தையை காப்பாற்ற பாடுபட்டவன் அல்லவா கௌத்தம்??

அன்று கௌத்தமிற்கு வெளிநாடு போகும்போது 2மனது.
ஒன்னு தன்னுடைய பெற்றோரை தான் போனால் யாரு கவனிப்பது??
தன்னை போல தம்பி பார்த்து கொள்வானா?? என்று மனதில் சஞ்சலம் ஏற்பட்டது.
ஆனால் போகலன்னா காசுக்கு எங்க போறது?? வெளிநாட்டுக்கு போனா தானே ஏதாவது வீட்டுக்கு செய்யலாம். தனக்கும் தன் பெற்றோருக்கும் நிற்க வீடு கட்டலாம்..
தன் பெற்றோருக்கு ஏதாவது மருந்துதவி, செலவுக்கு கொடுக்கலாமே என்று தான் கௌத்தமும் வெளிநாடு போக நினைத்தான்.
வெளிநாட்டுக்கு போகவும் வேணும் ஆனால் போகவும் இஷ்டமில்லை போல இருந்தது..

வெளிநாட்டுக்கு கௌத்தம் போக முன்னால் அவனது வாழ்வில் வேப்பிலையை பார்க்கவும் கசப்பான நாட்களாகவே இருந்தன.
யோசித்து தடுமாறும் நேரங்கள்ல இவை கடவுளின் சோதனை... என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டான் கௌத்தம். கடவுளோடு  அவனது துணையாக இருந்ததும் கயல் தான்.

2 3 வருடங்களாக கௌத்தமின் தந்தைக்கு என்ன நோய் என்று தெரியாமலே இருந்தது.
பல வைத்தியர்கள் கிட்ட பரீசிலனை செய்தும் யாருமே நோயை கண்டுபிடிக்கவில்லை. அன்று டவுனில் இருந்த டாக்டரிடம் செல்ல,
பல டெஸ்டிங்களை செய்ய, நோயும் கடவுளின் அருளால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு, அரசாங்க ஆஸ்பத்திரியில் செய்ய காலம் எடுக்கும் என்று சொல்ல, கௌத்தமிற்கு தலையில் இடி விழுந்தது..
கொஞ்ச காலம் அப்படியே இருக்க,
வருத்தமும் அதிகரித்தது.
கயலின் வேண்டுகோளுக்கு இணங்க ப்ரைவெட்டில் காட்ட தந்தையை அழைத்து வந்தான்..

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now