💕 நீயே - 11 💕

156 14 11
                                    


கையின் இறுக்கத்தை சற்று நேரத்தில் உணர்ந்தவள்,
திடுக்கிட்டு கௌத்தமை பார்த்து, மன்னிப்பு கேட்டுவிட்டு தன் கைகளை எடுத்துக் கொண்டாள்.
"அடி, கயல், உனக்கு தேவன்னா என் கைய புடித்துக்கோ. எல்லோருக்கும் எல்லார்ட கைய புடிக்க இஷ்டம் இருக்காதே. எல்லோருக்கும் அந்த கம்ஃபொடபல் ஆகவும் இருக்காதே.. உனக்கு நடந்த அந்த கெட்ட கனவுகள், கண்ட கண்டவனை நினைக்கும் போது என் கைய இருக்கு. உனக்கு கிள்ளனுமோ, அடிக்கனுமோ, என்ன அநியாயம் செய்யனுமோ அதெல்லாம் செய். நா ஒன்னும் சொல்ல மாட்டேன். உனக்கு யாருமில்ல தனிய இருக்கிறதா தோன்றினாலும், நா இருக்கேன் என்று என் கைய பிடித்து புரிந்துக்கோ" என்றான் கௌத்தம்.
கௌத்தமின் வார்த்தைகளை எண்ணி சந்தோசப்பட்டாள் கயல்.
எனக்கு யாரு இல்லைன்னாலும் கௌத்தம் இருக்கானே..

கடலும் அண்மிக்க,
கயலுக்கு ஏதோ நினைவுக்கு வர அவளை அறியாமலே மீண்டும் கௌத்தமின் கையை இறுக்கி பிடித்தாள். கௌத்தம் கயலை பார்க்க, கண்களை மூடிக்கொண்டாலும், கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.

"கயல், இன்ன பாரு" என்று அவளின் தோள்களை பிடிக்க, அவளோ கண்களை திறந்தாள். எதுவும் பேசாமல் கௌத்தமின் நெஞ்சில் சாய்ந்தாள். தனக்கு ஆத்திரம், கவலை  தீரும் வரை அழுதாள். சற்றும் அவளது செயலை எதிர்ப்பார்க்காத கௌத்தம் தன்னோடு அவளை இன்னும் இறுக்கி கட்டியணைத்து, தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

எதுவும் பேசாமல் அப்படியே எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் கண்களை துடைத்துக் கொண்டு கௌத்தமிடமிருந்து விலகினாள். "என்னால தாங்கிக்க முடியல்ல அதனாலதான் உன்ன..." என்று கயல் குரல் தழுக்க சொல்ல,
"அதெல்லாம் பிரச்சன இல்ல.. இப்ப எப்படி இருக்கு??" என்று கேட்க,
"ஐ எம் ஓகே." என்று நடந்தாள்.

கயலுக்கு ஏதாவது வாங்கிட்டு வர அந்த கடற்கரையில் இருந்து கடைக்குள் நுழைந்த கௌத்தம்,
கயலை போய் உட்கார சொன்னான். சங்கீதாவை தேட அவளோ இல்லை. ஃபோனை எடுத்து கால் பண்ண பார்த்துவிட்டு," அவர்கள் இருவரும் நிம்மதியாக இருக்கட்டுமே" என்று பேசாமல் இருந்து விட்டாள் கயல்.
அங்கே அன்று ராம் கூட இருந்த அதே மர குற்றி அவளை "வா.. வா" என்று அழைத்தது.
அவளை அறியாமலே, அதை நோக்கி சென்றாள்.
அவளோடு பேசிய வார்த்தைகள், அவனது தோளில் சாய்ந்த நேரம், அவனை கொஞ்சியது, கைகோர்த்தது, சாக்லேட் ஊட்டியது என்று பல நினைவுகள் அலைமோத மீண்டும் அவளை அறியாமலே கண்ணில் இருந்து கண்ணீர் சுரந்தது..

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now