💕 நீயே - 05 💕

286 14 5
                                    


என்ன செய்வோம்?? என்று யோசிக்க,
கயலுக்கு ஐடியா ஒன்று வந்தது.
பொதுவாக எக்ஸாம் என்றால் மகேஷ்ஷோடு மெசேஜ் செய்து படிப்பாள்.
"மகேஷ், இது சரியான்னு பாரே.." என்று கயல் வட்செப் செய்ய,
மகேஷ்ஷும் திருத்தி அனுப்புவான்.

இந்த நேரம் தன்னை ராம் விட்டு சென்று இரு மாதங்கள் இருக்கும்.. அவளால் ராம்மை மறக்க எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று அவளுக்கும் இறைவனுக்கும் தான் தெரியும். சேர்ந்து படித்து பிஸியாக மாறினால், எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பினால்.

அதனால் கயல் இந்த முறை தன் சுதந்திரத்தை பயன்படுத்த எண்ணினாள். ஒருவேளை ராம் இருந்தால் அவனோட பேசாதே, இவனோட பேசாதே... அவனுக்கு உன்ன விட்ட வேறு யாருமில்லையாமா? அவனுக்கு நோட்ஸ் கேக்க வேற யாரும் கிடைக்கவில்லையா?? என்று கயலோடு சண்டை போடுவாள். அவளின் ஆண்சகபாடிகளோடு பழகும் நட்பை அவன் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை.
சிலவேளைகளில் கயலுக்கு ராமின் செயற்பாடு எரிச்சலை கூட ஏற்படுத்தும்.

ஏனென்றால், ராம்மை தன் வாழ்க்கையில் அனுமதிக்க முன்னர் தான், மகேஷ், கௌத்தம், ராஜ் ஆகியோர் அறிமுகமாகினர். அன்றிருந்து இருந்து இன்று வரை கயலுக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவிகளை அந்த நண்பர்கள் செய்து இருக்கின்றனர். பிரச்சினைகளில் கை கொடுத்து உதவி இருக்கின்றனர். சாப்பாடு கொண்டு வந்து கயலின் பசியை போக்கி இருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களை ராம்மை கண்டதும், பழகி காதலிப்பதால் மற்ற ஆண் நண்பர்களோடு பேச வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்??
பழகியவர்களிடமிருந்து அவ்வளவு இலகுவாக மறுத்து பழக முடியுமா??

பொதுவாக கயலோடு கௌத்தம், ராஜ் பேசும்போது, "அடி" அதாவது டி போட்டு பேசுவதை பாடசாலை காலத்திலே பெண் நண்பர்களுக்கு கூட இடமளிக்காத கயல், இன்று ராஜ், கௌதமிற்கு அந்த உரிமையை கொடுத்தாள். அப்படி கூப்பிடுவதால் இன்னும் இன்னும் உரிமையாக பழகுகிறார்கள் என்று அவள் மனதில் எண்ணம் ஏற்பட்டது. முதன்முதலாக இப்படி ஏற்பட்ட அழகிய எண்ணங்களை ராமிற்காக விட்டுக் கொடுக்க முடியாது என உறுதி பூண்டாள் கயல்.
அவர்களை பற்றி இனி ராமிடம் பேச கூடாது என்றும் நினைத்தாள். சொன்னால் தானே பிரச்சினை... என்று அவர்களது நட்பை ராமிடம் மறைக்க தொடங்கினாள்..

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now