💕 நீயே - 33 💕

144 10 15
                                    


"கௌத்தம், எங்கட வீட்டுக்கு வந்து போவேன். எங்க வீட்டுக்கு இதுவர நீ வந்தும் இல்லையே.. " என்று கயல் சொல்ல,
"வர கஷ்டம்டி, ஏன்னா தீடீரென்று சரி வந்த விஷயமே.. ஊர்ல நிறைய வேல இருக்குடி. அப்பா, அம்மாவ கூட்டிட்டு போய் செனல் பண்ணனும். ஏஜென்சிய பார்க்கனும். அதனால சோரிடி.." என்று சொல்ல,
கயலிற்கு உயிரே போனது.
" அப்போ கௌத்தமுற்கு என்ன பார்க்கனும்ன ஒரு எண்ணம் கூட இல்லை போல " என்று வருந்த தொடங்கினாள்.
அவன் பேசுவதற்கு ம்ம்ம் என்று மட்டும் சொன்னதோடு, அமைதியானாள் கயல்.

" கயல்.. "
" சொல்லுடா "
" உன்ன நா பார்க்கனும்டி வெளிநாட்டுக்கு போக முதல்ல. அதனால எனக்கு உன்ட வீட்டுக்கு வர கிடக்கலன்னா மன்னித்துவிடு. ஆனா கட்டாயம் யார்போர்ட்டுக்கு நீ வரனும்டி. என்ன வழியனுப்ப" என்று கௌத்தம் சொல்ல, சந்தோசத்தில் மிதந்தாள் கயல். ஆனாலும் அவனது வேண்டுகோள்களை உடனே ஏற்றுக் கொண்டா, நா எங்கடா கூப்பிட்றன்னு பார்த்துட்டு இருந்தது மாதிரி இருக்குமே.. கொஞ்சம் டிமான்ட் காட்டனுமே" என்று நினைத்தவள்,
" பார்ப்போம் கௌத்தம். சுவர் இல்ல" என்றாள்.
" அதெல்லாம் சரி வராது. நீ கட்டாயம் வரனும்டி. உனக்காக நா வைட் பண்ணிட்டு இருப்பேன். நேர காலத்தோட சொல்லிட்டேன். அதனால ஒருவேளையும் அந்த நாள் போட கூடாது " என்று உரிமையாய் கட்டளையிட்டான் கௌத்தம்.

" நா வர்லன்னா என்ன போக மாட்டீயா?? சும்ம போடா.. " என்று கயல் சொல்ல,
" இல்லடி போக மாட்டேன்.. " என்றான். ஆனா அது விளையாட்டுக்கா, இல்லன்னா சீரியசா என்று கயலுக்கு விளங்கவில்லை.
ஆனா கௌத்தமை எப்படியாவது போக முன் பார்க்க வேண்டும் என்று கலண்டரில் அந்த திகதியை மார்க் செய்தாள். மனதில் நினைவில் வைத்துக் கொண்டால் ஒருவேளை மறந்துவிடுமோ என்ற பயத்தால்..

நாட்கள் சக்கரமாய் சுழன்றன.
கௌத்தம் கயலோடு தினமும் பேச கூட நேரம் இருக்கவில்லை.
ஏதாவது வேலை கௌத்தமிற்கு வந்து கொண்டே இருந்தது.
கயலும் தன்னுடைய தொழிலில் பிஸியாக மாறிக் கொண்டிருந்தாள்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now