💕 நீயே - 34 💕

161 9 4
                                    


சில கணத்தில், கயல் கௌத்தமை விலத்தி,
" டேய், கௌத்தம்.."
" சொல்லு கயல்.."
" எனக்கு சமைக்க தெரியாது. அப்பயும் என்ன ஏத்துக்கொள்வாயா?? பரவல்லயா?? "
" அதற்கென்ன கயல், நீ தான் கேக் ஸ்பெஷலிஸ்ட் ஆயிற்றே. மூனு நேரமும் சோறுக்கு பதிலா கேக் செய்து தா. நா சாப்பிட்றேன்" என்று கௌத்தம்,
"என்ன நக்கலா?? நீ தான் அன்னைக்கு என்னமோ சொன்னீயே.. "
" என்னது?? " என்று தெரிந்தும் தெரியாதது போல கேட்டான் கௌத்தம்.
கௌத்தம் கயலின் கூந்தலை அவளது காதலின் பின்னால் சொறுகிவிட,
" சமைக்க தெரியலன்னா 1மாதம் அம்மா வீட்டுக்கு அனுப்பி பழகிட்டு வர சொன்னீயே.. " என்று அப்பாவியாக சொன்னாள் கயல்.
" அடி, அது ரம்யாக்கே.. இது நீயே கயல்.. அவள்ள வேண்டும்னா விட்டுட்டு இருப்பேன். என் கயல்ல, அதாவது உன்ன அப்படி விட்டுட்டு இருப்பேனா??" என்று சொன்னவாறே கயலை பார்த்து கௌத்தம் கண்ணடிக்க,
" போடா போடா.. ஐஸ் வைக்காம.. அதெல்லாம் விடே.. எனக்கு வீட்டு வேலையும் செய்ய தெரியாதே.. "
" அது பரவல்லடி. நாம சேர்ந்து செய்யலாம்"

" எனக்கு டிரஸ் தைக்கவும் தெரியாதே."
" பரவல்ல டிரஸ் வாங்கி தர்ரேன். இல்லன்னா தைக்க கொடுப்போம்.."
" கௌத்தம், எனக்கு புள்ள வளர்க்கவும் தெரியாதே.. "
" அதற்கென்னடி, புள்ள பெத்து வளர்க்க பழகிக்கலாம். என்ட அம்மா, உன்ட அம்மாவும் நம்ம கூட தானே இருக்காங்க.. அடி கயல், உனக்கு ஒன்னுமே செய்ய தெரியல்லன்னா.. உனக்கு என்னதான் தெரியும்?? "
" என்னடா அப்படி கேக்குற?? உன்ன உயிராய் லவ் பண்வேன். உன்ன நல்லா பார்த்துக் கொள்வேன். உன்ட பெற்றோர்ர நல்ல கவனிப்பேன். உன் சொல் பேச்சு கேப்பேன்.." என்று பட்டியல் ஒன்னு கயல் சொல்ல,

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

கௌத்தம் கயலிற்கு காதில் விழ முணுமுணுக்க செய்தான்.
" என்னடா, ஓவரா தான் பண்ற?? கௌத்தம்.. என்ன கிண்டலாக்க ஒரு பாட்டு பாட்ற எனா?? "
" என்னடி அப்படி சொல்ற?? உன்ன நினைத்து புகழ்ந்து தான் பாட்றேன். நீ பக்கத்துல இருந்தா போதும்.. வேறு ஒன்னும் தேவல்லன்னு "
" கௌத்தம் "
" என்ன சொல்லுடி "
" கௌத்தம்"
"கௌத்தம்"
"கௌத்தம் "
" கௌத்தம் "
என்று சொன்னாலும் கோபத்தால் அவள் மேலே எறிந்து விழாமல்,
" என்ன தங்கமே.. என் கண்ணே.." என்று சொல்ல,
கயலின் முகமோ மலர்ந்தது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now