💕 நீயே - 30 💕

150 10 15
                                    


"இதுல என்னடி இருக்கு..." என்று கயலின் வலது கரத்தை தன் தோளிலும், மற்றைய கரத்தை தன்னுடைய இடுப்பிலும் வைத்து விட்டான். அது மாதிரி அவனும் கயலின் மேல் வைத்து மெல்லிய மெலடி பாடலுக்கு ஏற்ப ஆடத் தொடங்கினர்.
ஒவ்வொரு வடிவங்களில் கண்மூடி செய்யப்பட்டு கயலிற்கும், கௌத்தமிற்கும் கொடுக்கப்பட்டன.
கயலோ கௌத்தமின் பார்வையும், கண்களையும் நிராகரித்தபடியே இருந்தாள்.

"என்னடி, என்னமோ யோசனயா இருக்கிற மாதிரி இருக்கு?? ஏதாவது பிரச்சினையா??" என்று கௌத்தம் ஆடியபடி கேட்க,
"இல்லடா, அப்படி ஒன்னுமில்ல"
"அப்போ, என்ன விட்டுட்டு போறத பத்தி நினைக்க கிட்ட உனக்கு கவலையா இருக்கா?? வேணும்னா ஒரு கிழம என் கூட இருந்துட்டு போகலாமே" என்றான்.
" அதுவும் ஒரு காரணம் தான். அத விடவும் உன்ன வாழ்க்கைல்லயே மிஸ் பண்ணிவிடுவேனோ என்ற ஏக்கமோ தெரியல்லடா " என்று மனதால் கூறிக் கொண்டாள்.
" இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.. " என்றாள் கிண்டலோடு..

" கௌத்தம், உனக்கு இந்த ட்ரைனிங் காலம் எப்படி இருந்தது?? இந்த கிழம நா போனதும் என்ன மிஸ் பண்வீயா??" என்று கண்கள் முழுக்க கண்ணீரோடு மினுங்கியபடி கேட்டாள் அவள்.
" என்னடி அப்படி கேக்குற?? உனக்கு எப்படி இருந்ததோ, அப்படி தான் இருந்தது.. உன் கூட கழித்த ஒவ்வொரு நொடியையும் மறக்க மாட்டேன்டி... "
" உன் பேர்த்டே பார்ட்டி "
" பைக் ரைனிங்.. "
" அன்றைய நாள் அவ்வளவு சந்தோசமா இருந்தது, கௌத்தம்..."
" நீ சமைத்து தந்த சாப்பாடு, என்ன வைத்து தான் டெஸ்ட் பண்ணி பார்த்தது.. ஒருநாள் உப்பு கம்மி, உப்பு கூட.. கைய வெட்டிட்டு, கைல்ல காயம் வரும்வர முடியாதுன்னு சொல்லாம எனக்காக சமைத்து வந்தீயேடி.. " என்று கௌத்தம் சொல்ல,
மெல்லியதாய் புன்னகைத்தாள் கயல்.
" சமைத்த சாப்பாட்டிலும் குறை சொல்லாம என்னை எப்பயும் ஊக்குவித்தது, என்ட மனச வேற லெவல்ல புடித்துட்ட.. " என்றாள் கயல்.
" எனக்கு காய்ச்சல் வந்த நேரம் என்னை கவனித்த விதம்... மறக்க மாட்டேன்டி "
" பக்கத்துல இருந்தா இத விட நல்லா கவனித்து இருப்பேன்டா.. ஆனா என்ன செய்ய?? "

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now