💕 நீயே - 23 💕

119 12 20
                                    



"மகன், உனக்கு தெரியுமே.. ரம்யாட தந்தையும், நானும் சின்ன காலத்துல இருந்து நல்ல ப்ரெண்ஸ். நல்ல பழக்கம் வேற. திருமணம் முடிவு செய்த பிறகு ரம்யாட அப்பாக்கு என் கூட எவ்வளவு நன்றாக, நெருக்கமாக பழக முடியும். ஆனா நடந்தது என்ன?? அதெல்லாம் விடே.. கௌத்தம், உங்க அம்மாக்கு சுகமில்லன்னும் ரம்யாட வீட்டுல இருந்து யாரும் வந்தாங்களா???
இல்லையே..
வர முடியாத அளவு என்ன வேல இருக்குடா??
ஒரு கோல்லாவது பண்ணாங்களா?? இல்ல.."
" அதெல்லாம் விடுடா.. பண்டிகைகள் எத்தனையோ வந்தன. அதற்காகவது வந்தாங்களா?? " என்று வினவினார் கௌத்தமின் அம்மா ஆத்திரத்தோடு.
" சந்தோசமான விஷயத்துக்கும் இல்ல. சுகம்விசாரிக்கவும் வர்ரது இல்ல.. இப்படியான சம்மந்தம் ஒன்று தேவையா, கௌத்தம்?? நீயே சொல்லுடா " என்று அம்மா, அப்பா கேட்க,
எனக்கு பதில் இருக்கல்லடி.
இயலுமான அளவு அவங்கள்ள சமாளிக்க பார்த்தேன். ஆனா முடியல்ல..
" ரம்யா வீட்டுக்கு போய் இந்த சம்மந்தம் வேணான்னு சொல்ல போறேன்னு அப்பா சொல்லி இருக்காரு.. "
" என்னால தடுக்கவும் முடியல்லடி. என்ன சொல்லி தடுப்பேன்?? மூத்த மகன்ட விஷயம், அவங்களுக்குன்னு ஆசைகள் இருக்கும் தானே. அவங்களுக்கான ஆசைகளை எல்லாம் எனக்காக தியாகம் பண்டாங்க. ஆனா, இப்படியான சிறிய சிறிய ஆசைகள் மனசுல இருக்க செய்யும் தானே.

பண்டிகைகளுக்கு ரம்யாவ தவிர மற்ற எல்லோரும் வீட்டுக்கு வரனும். சிரித்து பேசிட்டு இருக்கனும். வெளியூரும் இல்லையே.. ஒரே ஊர் தானே.. நல்ல பழக்கப்பட்டவர்கள் தானே. எனக்கும் ஆசை இருக்காதா?? ஆனா ரம்யாட அப்பா ரொம்ப கண்டிப்பு டி. அவரு அவர்ட மனைவிய எங்கையும் அனுப்புறதில்ல. அவரும் போறதில்ல. அப்படி எல்லா சந்தர்ப்பங்கள்ள இருக்கிறது சரியா??
என்ட அம்மா, அப்பா, என்ட நெருங்கிய குடும்ப யாருக்கும் ஏதாவது சுகமில்ல இல்லன்னா ஆஸ்பத்திரில இருந்து வந்தாங்கன்னா ஒரு தடவ எங்கட வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போக ஏலாதா???
என்ட அம்மா, அப்பா ஆசப்பட்றது பிழையா டி??
இவங்களுக்கு இருக்கிற பிரச்சின என்னமோ தெரியல்லடி.
ரம்யாவ இதுவர நா அதட்டி, ஏசி கூட இல்லடி. ஆனாலும் எந்த நேரமும் அவள்ள தாலாட்ட ஏலாதே. அவ கல்யாணம் பண்ண போற பையன் நான். என்ட நிலைமை புரிந்து, அவட வீட்டு ஆக்களுக்கு சொல்லி அவ தானே அனுப்பி வைக்கனும்..
எனக்கும் அவ மேல இருந்த லவ்வும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்துவிட்டதுடி.. " என்று புலம்பினான் கௌத்தம்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin