💕 நீயே - 20 💕

141 12 11
                                    


அப்படியே சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டுவிட்டு, கடற்கரையில் விளையாடியும், உண்டும் அன்றைய நாளை கழித்தனர்.
ஃபோட்டோ எடுக்கும் நேரம்.
க்ரூப்பாக, தனியாக என்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அந்த நேரம்,
"மகேஷ், ஓகனைசிங் கம்மிட்டிய ஒரு ஃபோட்டோ எடேன்" என்று சொல்ல,
"இது பெரிய ஓகனைசிங், சும்மா போடா. அப்படி பார்த்தா எத்துன கம்மிட்டி இருக்குது. ஒருவருஷம், இரண்டு வருஷம், 3வருஷம் என்று ஓகனைச் பண்ண எத்தனையோ கம்மிட்டி இருக்கு. இது ஒரு நைட் ஓகனைச் பண்ணது. அதற்கு பேரு ஒரு கம்மிட்டிடா.. உனக்கு என்ன இப்ப கயல் கூட கபெல் ஃபோட்டோ எடுக்கனும் தானே. அதானே இப்படி சுற்றி வளைத்து சொல்ற" என்று சொல்ல,
"என்ட வாய்ல நல்லா வருது. வாய கிளறாதேடா.. உனக்கு ஃபோட்டோ எடுக்க முடியாதுன்னா ஏலாதுன்னு சொல்லு. அத விட்டுட்டு சும்ம உளறாம" என்று கௌத்தம் ஏசினாலும், மனதில் இருந்தது அவன் சொன்னது தான்.
சற்றே கௌத்தம் சூடாகுவதை கண்டு, மகேஷ் இருவரையும் நிறுத்தி ஃபோட்டோ எடுத்துவிட்டு, அந்த கம்மிட்டி மற்றவர்களையும் சேர்த்தும் ஃபோட்டோ எடுக்கவும் செய்தான்.

எல்லாம் முடிய,
பஸ்ஸில் ஏறி போகும்போது எல்லோருக்கும் மனதில் பாரம். இவ்வளவு வருஷத்துக்கு ஒரே ஒரு தடவ தான் ட்ரிப் போய் இருக்கோம். அதுவும் பக்கத்துல இருக்கிற இடத்துக்கு, கொஞ்ச நேரத்துக்கு. 1நாள் 2நாள் என்று போயிருந்தால்.. எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்று மனங்கள் ஏங்கியன.

அதற்கேற்ப வானொலியில் பாடல்களும் மென்மையான காதல் பாடல்களே சென்றன. கபெல்லாக ஒவ்வொருவரும் ஆட தொடங்கினர்.
சங்கீதா கயல் கூட.. அப்படி தோழிகள் தோழிகளுக்குள்ள..
இப்படி ஆடிக் கொண்டு இருக்க,
முன்னால் இருந்து ட்ரைவரிடம் எதையோ பேசிக் கொண்டு வந்த கௌத்தமோடு மோதினாள் கயல்.
பெலன்ஸ் இல்லாமல் போக,
கௌத்தமின் தோளை பற்ற, கௌத்தம் கயலின் இடையை பிடித்துக் கொண்டான்.
இரு கண்களும் ஒன்றை ஒன்று பார்க்க, அந்த நேரம் அவர்களுக்கு பேக்ரொவுன்ட் பாட்டாக...

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now