💕 நீயே - 03 💕

429 15 5
                                    


ஏன் ராம் எனக்கு இப்படி பண்ண??
நா உன்ன எவ்வளவு நம்பினேன் தெரியுமா?? இப்படி ஏமாத்துவன்னு கனவுலயும் நினைக்கல்ல..
நா என்னடா பண்ணேன்?? உன்ன உயிரா லவ் பண்ணது என் தப்பா? உன்ன என் புள்ளையா கவனித்தது பிழையா?? என்று மனதிடம் கேட்டுக் கொண்டாள் கயல்.

பேருந்தில் ராம் கூட சென்ற பயணங்கள் அப்போது இனிப்பாய் இருந்தாலும், இன்று கசப்பாய் உணர்ந்தாள்.
அவனது கையை கோர்த்த தன் கைகள் அன்று நெருப்பாய் சுடத் தொடங்கியது போல உணர்ந்தாள்...
இப்படி பழைய நினைவுகளை மீட்டிக் கொள்ளக் கூடாது என்று எத்தனை தடவை நினைத்தாலும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பாதி தூரம் சென்றதும் சங்கீதா,
"கயல், வேணும்னா நா உன்கிட்ட வரவா??" என்று கேட்க,
இதற்கு பிறகு வந்தால் என்ன?? வரலன்னா என்ன?? என்று மனது சொல்ல,
"இல்ல பரவல்ல" என்று அருகில் இருந்தவனை ஏறெடுத்து பார்த்துவிட்டு சொன்னாள் கயல்.
அவளது பதில் அவள் சற்றே கோபத்தில் இருப்பதை அறிந்த சங்கீதா,
கயலின் பக்கத்தில் இருந்த நபர் எழுவதை கண்டு, தன் இருக்கையில் இருந்து எழுந்து கயலோடு ஒட்டிக் கொண்டாள்.

" கயல்."
" சொல்லுடி "
" என்ன கோபமா??"
" இல்ல, ஏன்டி?? "
" நா உன்னோட உட்கார வரலன்னு??"
"அப்படி ஒன்னுமில்ல"
" என்ன கத?? எப்படி இருக்க?? எவ்வளவு நாளைக்கு பிறகு உன்ன பார்க்குறேன்??"
என்று சங்கீதா சொல்ல,
" ஒரு கதையும் இல்ல.."
" நீ போன கிழமை சொன்ன விஷயத்துல புதிய அப்டேட் ஒன்னுமில்லயா? " என்று கேட்டாள் சங்கீதா.
" அதுவா? அத மட்டும் கேட்றாதே சங்கீதா. அந்த நிகழ்வுக்கு பிறகு நிறைய திருமண ப்ரொபஷல்கள் வீட்ல தேடினாங்க. தரகர் இன்னைக்கு இப்போ கால் பண்ணி, நா போனகிழமை காட்டின மாப்பிள்ளை வீட்டிலிருந்து உங்க மகள்ள பாக்க வாராங்க. நாளைக்கு மகள் வீட்டுல இருப்பாங்களா??? என்று என்கிட்ட விசாரித்து சொல்ல சொன்னாங்க. " என்று சொன்னாள் கயல்.

சங்கீதாவோ," அடி அப்போ இங்கிருந்து  இறங்கி அந்த விஷயத்தை பார்த்துட்டு வாவேன். நீ வரமாட்டேன்னு சொல்லியும் எங்களால்ல தான் வந்தீயேடி. எல்லாம் உன் நேரம் தான்... " என்றாள்.
" அப்படி வந்த பயணத்த இடைல்ல திரும்பி போக முடியாது. எனக்கானது இது என்றால் நா வீட்டுக்கு போகும்வரை அந்த ப்ரொபஸல் இருக்கும்டி.. இறைவன் எல்லாம் அறிந்தவன்.. என்னதான் நடந்தாலும் என்னால ராம்ம மறக்க முடியல்ல.... " என்று கயல் சொல்ல,
" உன்ன விட்டு போனவனை பத்தி ஏன்டி மீண்டும் யோசிக்கிற?? "
என்று கதையை சங்கீதா மாற்றினார். படிப்பை பற்றியும், யுனிவர்சிட்டி பற்றியும், மற்றைய சகபாடிகளின் கதைகளும் பேசிக்கொண்டிந்தாலும்,
கயலுக்கு இப்போது தேவைப்பட்டது காயப்பட்ட புண்ணிற்கு மருந்து போட தான்.. ஆனால் சங்கீதா...
இதற்கு பதிலா என் அருகில் அமர்ந்து கௌத்தம் ஆறுதல் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்?? என்று மனம் அவனை எண்ணி ஒரு நிமிடத்திற்கு ஏங்க தொடங்கியது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now