💕 நீயே - 02 💕

577 17 11
                                    


"அதெல்லாம் பெரிய ஹெல்ப் இல்லடா.. உனக்காக இதெல்லாம் நா பண்ண மாட்டேனா???" என்று பதிலளித்தாள் கயல்.
ஆன்லைனில் இருந்த கௌத்தம், உடனே மெசேஜை பார்த்து,
" சும்ம ஐஸ் வைக்காம வந்து சேரு.." என்று அனுப்ப,
குட்நைட் சொல்லிவிட்டு இருவரும் உறங்க சென்றனர்.

கௌத்தம், கயல் சென்னையில் பிரசித்தி பெற்ற இன்ஜீனியரீங் காலேஜ்ஜில் படிக்கின்றனர்.
இது தான் அவர்களது கடைசி ஆண்டு.
ஏன் கடைசி செமிஸ்டரும் கூடவே.
கொரானாவால் காலேஜ் மூடப்பட்டு ஆன்லைனில் படிப்பித்தல் நடவடிக்கைகள் சென்றன. இப்போதைய கால கட்டத்தில் பயப்படுமளவு கொரானா இல்லாததால் மீண்டும் அவர்களை அழைத்து பரீட்சையை காலேஜ்ஜிலே செய்ய தீர்மானித்தது இன்ஜீனியரீங் டிபார்ட்மண்ட்.

கௌத்தம், கயலைப் பற்றி சொல்வதென்றால்..
அவர்கள் இருவர்களும் ஒருத்தரை ஒருத்தரை விட்டுக்கொடுக்காத நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் அறிமுகமானதும் இந்த காலேஜ்ஜில் தான்.

முதலில் கயலின் நண்பியான விஜியால் கௌத்தம் கயலிற்கு அறிமுகமானான்.
விஜியும் கௌத்தமும் காலேஜ் வந்ததில் இருந்து நெருங்கி பழக தொடங்கினர். எந்தளவு என்றால் பலர் அவர்களை காதலர்களாக கூட கருத தொடங்கினர். விஜி எடுக்கும் பாடங்களே கௌத்தமும் தெரிவு செய்து இருந்தான். ஆனால் கயலின் ஒரு பாடம் கௌத்தமின் பாடத்தில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தது. இதனால் என்னவோ விஜியும், கௌத்தமும் நட்பில் நனைய தொடங்கினர்.
விஜியின் வாயில் எந்த நேரமும் கௌத்தம் கௌத்தம் என்றே இருந்தது.
கயலிற்கு அந்த நேரத்தில் மகேஷ், ராகுல் என்பவர்களின் நட்பு இருந்தமையால் கௌத்தமிடம் பழக தேவை ஏற்படவில்லை..
அது போலவே சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை..

விஜியோடு எந்த நேரமும் சுற்றும் கயலிற்கு ஓரிரு தடவை கௌத்தமிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.
விஜி சற்று வித்தியாசமானவள்.
சீனியர்களை மதிக்க மாட்டாள், தனக்கு கிடைத்த சுதந்திரத்தை முழுவதுமாக பயன்படுத்த சென்றும்,
ஓவர் தைரியத்தாலும் பல பிரச்சினைகளில் விழவும் செய்தாள். இதனால் கயலும் சற்றே தன் பெயரை காப்பாற்ற விஜியிடமிருந்து விலக தொடங்கினாள். அதன் விளைவாக,
ஆண்சகமாணவர்களிடம் கயல் சற்றே பிரகாசிக்க தொடங்கினாள்.
அப்படியே, கயலின் பண்புகளாலும், நடத்தையாலும் கௌத்தமின் மனதில் நட்பு என்ற வட்டாரத்திற்கு கயலை அனுமதிக்க தொடங்கினான்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now