💕 நீயே - 32 💕

141 12 16
                                    


அன்றிரவு நிலா ஒளியில் மரங்களுக்கு கீழே அமர்ந்து கயல், கௌத்தம் அவர்களது குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
தனியாக கௌத்தமோடு கயலிற்கு பேச நேரமும், சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.
இன்னும் 2நாள் நிற்பது தானே. எப்படியாவது கௌத்தம் கிட்ட சொல்லிரலாம் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அன்றைய காலையில் நேரத்தோடே கண்களை கசக்கி கொண்டு இருந்தான் கௌத்தம்.
கயலின் அப்பாவும், கயலின் வேண்டுகோளால் தான் காலையிலே எழுந்திருந்தான்.
அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்த கயல்,
கௌத்தமை வம்பிக்கு இழுத்தாள்
"என்னடா, இன்னைக்கு நேரத்தோட எழுந்திருக்க??" என்றவாறு.
அப்படியே கொஞ்சம் நேரம் கௌத்தம் கூட பேசிவிட்டு,
"இதுவர எத்தனையோ செல்பி எடுத்து இருக்கிறோம். ஆனா முகம் கழுவ முத ஒரு செல்பி எடுத்தா நல்லா இருக்குமே.." என்று கௌத்தம் சொல்ல,
முகத்தை மறைத்துக் கொண்டாள் அவள்.
முகத்தை மறைந்திருந்த அவளது கரத்தை தன் கரத்தில் வைத்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்தான் கௌத்தம்.
"ஒரு நாளைக்கு இதெல்லாம் மிஸ் பண்வோம்டி" என்று சொல்ல,
கயலின் கண்கள் சற்று கலங்கியது.

காலை உணவை உண்டுவிட்டு,
சுற்றுவோம் என்று கௌத்தம் கயலையும், கயலின் குடும்பத்தினரையும் கூட்டிட்டு சென்றான்.

அது சிறிய காடு.
பல ஒற்றையடி பாதைகள் அங்கே..
ஒன்றை தெரிவு செய்து கயலின் தந்தை செல்ல, பின்னால் எல்லோரும் தொடர்ந்தனர். எல்லா பாதைகளின் முடிவும் ஒரு இடத்தில் தான் முடிகிறது. அதனால் எந்த வழியால் சென்றாலும் பரவல்ல என்று சொன்னான் கௌத்தம்.
"போற பாதை வரும்போது விளங்க மரங்களில் ஓரத்துல இருக்கின்ற சிறிய தண்டுகளை உடைத்துவிட வேண்டும். அத பார்த்து வழிய கண்டுபிடிக்கலாமே.." என்று கயல் சொல்ல,
"என்னடி, இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறீயே.." என்று புகழ்ந்தான் கௌத்தம்.

பேசிக் கொண்டே போக, கயலின் பின்னால் கௌத்தம் வருவது சற்று அவளுக்கு சங்கடமாக இருந்தது. தான் சறுக்கி விழுந்துவிட்டால்??? கௌத்தம் முன்னால நோண்டியாகுனுமே..
தன் தங்கை எவ்வளவு கம்பீரமாக போறாள்.. அதற்கு நான்.. என்று தன்னையே குறைத்து மதிப்பிட்டாள்.
விழுந்தாலும் பரவல்ல, பின்னால கௌத்தம் வர்ரான் தானே. அவன் தாங்கி பிடித்துவானே... என்று
கற்பனை செய்து கொண்டாள். ஆனால் அந்த பகல் கனவோ கலைந்தது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now