💕 நீயே - 17 💕

136 12 8
                                    


மீட்டிங் முடிந்து எல்லோரும் செல்ல,
ப்ரொபஸர்களை சந்தித்து பேசி விட்டு வந்தனர் கௌத்தமும் கயலும்.
"கௌத்தம்"
"என்னடி??"
" நா உன் கூட ரைனிங் வாரது உனக்கு விருப்பமில்லையா?? ஆ யூ ஹெப்பி??"
என்று கேட்டாள்.
அவள் தன் வாயால் கேட்க வருவதை உணர்ந்த கௌத்தமோ,
" நா எங்க சந்தோசப்பட?? இங்கு இருந்தா தான் உன்ட கரச்சல்.. இன்டையோட உன் கரச்சல் முடிந்ததுன்னு நினைத்தேன். ஆனா எங்க?? இன்னம் மூனு மாசம் வால் மாதிரி என் பின்னால சுத்துவீயே.. "
" அப்படியா சொல்ற?? உன்ட பின்னால சுத்தாத நேரம் என்ட அரும விளங்கும் " என்று சொல்லிவிட்டு கோபத்தில் சென்றாள்.

" அடி, கயல். நா சும்ம குழப்ப சொன்னேன்டி.. அடி சோரிடி. மன்னித்துக்கோவேன்" என்று பின்னாலே சென்றான் கௌத்தம். படியினால் இறங்கிய கயலை இழுக்க, அவள் பெலன்ஸ் இல்லாம விழப்போனாள். அந்த நேரம் கௌத்தம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, தன் கைச்சிறைக்குள் அவளை பிடித்தான்.
விழப்போன பயத்தில் இருந்த கயலிற்கு கௌத்தமின் தொடுகை அமைதியை பெற்றுக் கொடுத்தது.
அதுமட்டுமல்லாமல் கௌத்தமின் கண்கள் கயலின் கண்களோடு மன்னிப்பு கேட்டு கெஞ்சியது.
உடனே அவனது சிறையில் இருந்து விடுதலைப்பெற்று, அவளோ பேசாமல் செல்லப் போனாள்.

"கயல், இன்னம் என்னை மன்னிக்கல்லையா?? நா வேணும்னா முன்ன மாதிரி உன்ன கைக்குள்ள வைத்து நீ மன்னிப்பு கேட்கும் வரை விடாமல் தாங்கவா???" என்று குறும்பாய் கௌத்தம் கேட்க,
" ஒன்னும் தேவல்ல. சரி மன்னிக்கிறேன். ஆனா மறக்க மாட்டேன்" என்று பின்னால் திரும்பி சொன்னாள் கயல்.
கௌத்தமை ஒழுங்காக பார்க்க முடியாமல் சொன்னவளின் கன்னங்களை பார்க்க, வெட்கத்தால் இளம்சிவப்பாக மாறி இருந்தன.
ஆனாலும் அந்த நிகழ்வை மீண்டும் நினைக்க, கயலிற்கு மெய்சிலிர்த்தாலும் அந்த உணர்வோ புடித்துப்போனது.

அப்படியே அந்த ஹாலை அடைய, பின்னால் கௌத்தமும் வந்தான்.
சகபாடிகள் அனைவரும் ட்ரீட் கேட்டுக் கொண்டு இருந்தனர். கண்ணால் எண்ணி பார்க்க 20பேர்.
சரி என்று கயலிடம் பக்கத்துல இருக்கிற காப்பி ஷோர்ப்பிற்கு கூட்டிட்டு போகலாமா?? என்று கேட்க,
அவளும் சரி என்றாள்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now