💕 நீயே - 27 💕

114 10 16
                                    


சரி பழகினது போதும் என்று கயலும் சொல்ல, கௌத்தமும் பைக்கை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்தான்.
கொஞ்ச நேரத்திலே ஹோட்டலும் வந்தது.
"கௌத்தம், உனக்கு எது வேணுமோ அத எனக்கும் ஆடர் பண்ணு" என்று கயல் சொல்ல,
"அடி, இன்னைக்கு உன்ட பேர்த்டே. நீ தான் எதையாவது தெரிவு செய்யனும் அத நா சாப்பிடனும்" என்று கௌத்தம் சொன்னான்.
மெனுவை பார்த்து,
"மொங்கோலியன் ரைஸ்" என்று சொல்ல,
கௌத்தம் இந்தியன் ஏதோ பிரியாணி ஒன்றை ஆடர் பண்ணினான்.
வெவ்வேறு சாப்பாடு என்றால் பகிர்ந்து சாப்பிடலாமே..
குடிப்பதற்கும் வெவ்வேறு ஜூஸ்கள் தெரிவு செய்தனர். அதையும் ருசிக்கலாமே என்ற எண்ணத்தில்..
ஆனால் மெனுவை பார்த்து ஒரே சாப்பாட்டையும், ஜூஸ்ஸையும் தான் முதலில் தெரிவு செய்தனர் கயலுக்கு சொல்லாமல் கௌத்தமும், கௌத்தமிற்கு சொல்லாமல் கயலும்.

கயல் தன் தொலைபேசியை நொண்டிக் கொண்டு இருந்தாள்.
சிரித்து சிரித்து மெசேஜ் பண்வதை கண்ட கௌத்தம்,
"யார்டி மெசேஜ்??"
" ப்ரென்ஸ் பேர்த்டே விஷ் பண்ணி இருந்தாங்க.. அதான்" என்றாள்.
"போய் பெஸ்டியா, இல்லன்னா கேர்ள் பெஸ்டியா??" என்று கேட்க, 
கௌத்தம் பொறாமையால் தான் கேட்கிறான் என்று புரிந்து கொண்ட கயல்,
"போய்பெஸ்டி" என்றாள்.
"எனக்கு தெரியாத உன்ட போய்பெஸ்டி யாருடி?? "
" இது நல்ல கத. உனக்கு என்ட ப்ரென்ஸ் எத்துன பேர், யாருன்டே முதல்ல தெரியாதே"
" நீ தான் சொல்லியும் இல்லையே. "
" நீ கேட்டே இல்லையே" என்றாள் கயல்.
" சரி சாப்பாடு வருது. ஃபோன்ன வைத்துட்டு சாப்பிடு கயல்" என்று சொல்ல,
தன்னோட பேசு, தன்னோடு இருடி. என்று சொல்லாம சொல்வதை நினைத்து சிரித்தபடியே ஃபோனையும் வைத்தாள்.

சாப்பாடும் வர, ருசித்து இருவரும் சாப்பிட்டனர்.
இடையில் கௌத்தமிற்கு புரைகேறியது.
உடனே கயல் அவனிடம் வந்து தண்ணீர் குடிக்க சொல்லி,
முதுகை மெதுவாக தட்டினாள்.
"என்னடி, கிடைக்கிற சான்ஸ்ல என்ன நல்ல அடிக்கிற போல.." என்று குழப்ப,
"மெதுவா பாவம்னு தட்டினேன். நீ சொல்ற மாதிரி நல்ல அடிக்க இருந்தது" என்றாள்.
"யாரோ என்னை நினைக்கிறாங்க போல" என்று கௌத்தம் சொல்ல, புதிராய் பார்த்து,
"அப்படியா யாரு இருக்காங்க..??" என்று கேட்டாள் கயல்.
"ஏன் என்ட ரம்யா... " என்று கௌத்தம் சொன்னபடியே கயலின் முகத்தை ஆராய்ந்தான்.
அவ்வளவு நேரம் வம்பிழுத்து அவளை சிரிக்க வைத்த முகம் சட்டென்று வாடியது. 100வோல்ட் பல்ப் தீடீரென்று கரன்ட் போய் செயலிழந்தது போல இருந்தது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now