💕 நீயே - 31 💕

134 11 4
                                    


"அம்மா, கௌத்தம் வீட்டுக்கு போய் வரலாமா?? உங்களுக்கும் கொஞ்சம் மைன்ட் ரிலாக்ஸா இருக்குமே.." என்று ஐடியாவை தாயிடம் போட்டாள் கயல்.
"அதுவும் சரிதான். வேறு எங்க சரி போனா நல்லம் தான்.. அப்பாகிட்ட பேசி பார்க்குறேன்" என்றார்.
அன்று சாப்பிடும்போது மெதுவாக கதையை விட்டுப்பார்த்தாள் கயல்.
அதற்கு,
" எனக்கு ஞாயிற்றுக்கிழமை காலேஜ்ல ஏதோ வைபவம். அதனால வர முடியாது" என்று தலையில் இடியை போட்டாள் கயலின் தங்கை.
" எனக்கு வரமுடியாது. எனக்கும் காலேஜ் இருக்கு " என்று தம்பி சொன்னான்.

" இவங்களோட முடியாது. யாரு வர்லன்னாலும் நாங்க போவோம்" என்று கயல் சொல்ல,
" வார கிழமை எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு " என்று அப்பாவும் சொன்னார்.
" அடுத்த மாதம் வேணும்னா போகலாம்.." என்றும் சொல்ல,
போககாட்டியும் நம்பிக்க இல்ல என்று நம்பாமல் இருந்தாள் கயல்.

மாத கடைசியும் வந்துவிட்டது.
" கயல், இதுவர எங்கயும் போகனும்னு ஆசப்பட்டு சொன்னதில்ல. அதனால பாவம் அவள் ஆசப்பட்றாலே கூட்டிட்டு போவோம்." என்று கயலின் அம்மா அப்பாவிடம் சொல்ல,
சரி என்று அவரும் போகலாம் என்று முடிவு செய்தார்.
சந்தோசத்தில் குதித்தாள் கயல்.

" கௌத்தம், நாங்க இந்த கிழம வர்ரோம்" என்று கயல் சொல்ல,
" சரி வா டி.. "
" என்ன வெல்கம் பண்ண ரெடியாகி இருடா.. " என்று சொல்ல,
" அப்படி என்னடி இருக்கு?? வந்தா கவனித்து அனுப்புறது. வேறு என்னடி இருக்கு??" என்று சொன்னான்.
" ம்ம்ம்ம், என்ன ஸ்பெஷல்?? என்னன்னா தரப் போற?? "
" கடல் சாப்பாடு, மீன்வகைகள் நீ சாப்பிடர்ரதில்லையே.. அதனால அதெல்லாம் வாங்கி அம்மாக்கு சமைக்க கொடுக்கனும்.. வேறு என்ன வேணும்?? "என்று கேட்க,
" நீ தான்டா வேணும்.. " என்றது கயலின் மனம்.
ஆனால்,
கௌத்தம் முன்னம் மாதிரி ஒன்னுமே பேசுறான் இல்லையே. என் மேல இப்பவும் ஐடியா இல்லையோ தெரியல்ல என்று கவலைக் கொண்டது அவள் மனம்.
" சரி, போய் அவன்ட மூட் ஐ மாத்துரேனே " என்று கண்மூடினாள் கயல்.

போவதற்கு முன் நாள் கயலிற்கு தூக்கமே இல்லை.
போய் கௌத்தமை காணும்வரை தூக்கமே வர்ல.. அவன் எப்படி இருப்பான்?? என்ன பேசுவான்?? அவங்க அம்மா, அப்பா எப்படி இருப்பாங்க? அக்கா ?? அவங்க கூட என்ன பேசுறது?? அவங்க மனச எப்படி கவர்ரது?? ரம்யா இன்னம் கௌத்தம் வாழ்க்கைல்ல இருக்காளா?? இருந்தா அவ வீட்டுக்கு போறதா?? கௌத்தம் கூட்டிட்டு போவானா?? என்று பல நல்ல யோசனைகள் தலையில் ஓடினாலும், போனா என்ன பேசுறது?? இரண்டுபேரையும் பிரித்து விட்ருவோமா?? " என்று வில்லியாக யோசிக்கவும் செய்தாள்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now