💕 நீயே - 09 💕

175 13 26
                                    

ஹாஸ்டலுக்கு வந்த கயல்,
ரேணுவோடு சேர்ந்து அறையை சுத்தமாக்கினாள்.
கணக்குகளை எழுதிப் பார்த்த தாள்கள் ஏராளம்.
தேவையான பாஸ்ட்பேப்பர்களை  பைல் ஒன்றில் போட்டு தன் ஜூனியர்களுக்கு எடுத்து வைத்தாள். மற்றவற்றை குப்பையில் போட்டாள். பின்னர் வொஷ் ஒன்று எடுத்துவிட்டு ரிலக்சாக இருந்து தொலைபேசியை பேக்கில் இருந்து எடுத்தாள்.
தொலைபேசியை பார்க்க, 3 மிஸ்கோல்கள்.
கௌத்தமிடமிருந்து.
2மணித்தியாலங்களுக்கு முன்னால்.
சைலன்ட்டில்  இருந்த ஃபோனை ஜெனரல்லுக்கு மாற்றி,
கௌத்தமிற்கு கோல் எடுத்தாள் கயல்.

ஒரே ரிங்கில் ஆன்சர் பண்ணான் கௌத்தம்.
"என்னடி இவ்வளவு நேரம் கோல் செய்தேன். ஏன் பேசல்ல?? என் மேல கோவமா??" என்று கேட்டான்.
"இல்லடா இவ்வளவு நேரம் ஃபோன் சைலன்ட்ல இருந்து, இப்பதான் போன் எடுத்தேன். கொஞ்சம் ரூம கிளீன் பண்ணிட்டு வொஷ் எடுத்துட்டு வந்து போனை எடுத்தேன். இப்பதான் ஹாஸ்டல் வந்ததும் வராததுமா கோல், மெசேஜ் பண்ண எனக்கு யாருமே இல்லையே. அதனால வேல முடிந்ததும் தான் ஃபோன்ன கைல்ல எடுக்குறது" என்று சற்று ஃபீல் பண்ணி சொல்ல,
"சரி சரி பழையவற்றை உளத்தாம இருடி. இனி கொஞ்சம் வந்ததும் ஃபோன்ன எடுத்து பாரேன். முக்கிய தேவைகளுக்கு யாராவது கோல் பண்ணி இருந்தா.. அதுசரி சுரேஷ் சொன்ன விஷயம் உனக்கு ஹேர்ட் ஆனதா??" என்று கேட்டான்.
" கொஞ்சம் பேர் அத கேட்டுட்டு இருந்தாங்க. அப்படி இல்ல தனியா கேட்டு இருந்தா பரவல்ல. பெரிசாக எடுத்து இருக்க மாட்டேன். உண்மையாகவே நான் உனக்கு யாராய் இருந்தால் அவனுக்கென்னவாம்?? முதல்ல சுரேஷூக்கு காத்துவாக்குல வந்த இரு காதல் படத்த ஒழுங்கா பார்க்க சொல்லுங்க. அதுல வர்ரது கண்ணம்மா இல்ல கண்மணி " என்று கயல் சொல்ல,
மறுமுனையில் கேட்டு கொண்டு இருந்த கௌத்தமோ சிரித்தான்.
" அவன் சொன்னதிற்கு நான் உன் மேல கோபப்பட்றது நியாயம் இல்லையே. நீ சும்மா தடுமாறாம இருடா"  என்றாள்.

" கயல், எனக்கு ஒரு டவுட் ஒருவேளை அவன் சொன்ன மாதிரி நீ எனக்கு கதீஜாவா? கண்ணம்மாவா??" என்று கேட்க,
"என்னடா, பேசுறது விளங்கல. அந்த கேரக்டரில் யார் பிடிக்கும்னு கேட்டியா?? " என்று கேட்க,
அவன், " ஆம்" என்றான்.
" கண்மணி தான் புடிக்கும். அமைதியான நல்ல ஒழுக்கமான பொண்ணு தானே "
" நீதான் கதை எழுதுவீயே. அந்த கதைய நீ எழுதி இருந்தா, நீ என்ன பண்ணிருப்ப??" என்று கேட்க,
"அதுவா, கதீஜாவ கொன்றுவிட்டு கண்மணிய ஹீரோ கூட சேர்த்து வைத்திருப்பேன்" என்று சிரித்தபடி சொன்னாள். "என்னடி நான் நினைக்காத அளவு நீ கேடியா இருக்க?? " என்று அவளை பகுடி பண்ணிக்கொண்டிருந்தான்.
" ஒருவேள நான் உங்க ஊருக்கு வந்தா உன் கதீஜாவை எனக்கு காட்ட மாட்டீயோ.." என்று தயங்கியபடி கயல் கேட்க,
" என்ன புரியலடி. என்ன சொன்ன?? "
" ஒன்னும் இல்லடா" என்று சமாளித்தாள்.
" நைட்டுக்கு ஏதாவது சாப்பாடு வேணும்னா கேளு. நான் ஒரு 7 மணி மாதிரி 4 சந்திக்கு போவேன். உனக்கு வேண்டியதை வாங்கிட்டு வர்ரேன்" என்று கௌத்தம் சொல்ல,
" சங்கீதா ஆடர் பண்ணிட்டாள் " என்று பதிலளித்தாள் கயல்.
"என்னமோ தெரியல்ல டி. உன்ன பாக்கணும் போல இருந்தது. அதான் பொய் சாக்கு சொல்லி வர  பார்த்தேன். நீ வேற வேண்டாம் என்று சொல்றீயே"  என்று கௌத்தமின் மனது  கவலைப்பட்டதை அறியாமல் சொன்னாள் அவள்.
" எக்ஸாமிற்கு கௌத்தம் படிக்கனுமே. அதனால தான் நா கூப்பிடல்ல. மத்தபடி உன்ன எனக்கு பாக்கனும்போல இருக்கு " என்று கயலின் மனம் சொல்லிற்று.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now