💕 நீயே - 13 💕

168 14 8
                                    


கயலின் தொலைபேசி அலரவே,
"கௌத்தம், ஃபோட்டோ எடுத்து முடிந்ததா???" என்று கேட்க,
"ஆம்" என்று சொல்ல விடைபெற்று சென்றாள்.
போகும் கயலை கௌத்தம் அழைக்க,
திரும்பி பார்க்கும் கயலை ஃபோட்டோ எடுத்தான் கௌத்தம்.
அப்படியே அவளும் இரு கைகளை இணைத்து ஹார்ட் செய்து காட்ட,
கௌத்தமின் ஹார்ட்டில் அம்பு விட்டது போல இருந்தது.
ஒருகணம் ஸ்தம்பித்தாலும் நிலைக்கு வந்து, அதையும் ஃபோட்டோ எடுத்து கையசைத்தான்.

கயல் ஹாஸ்டலிற்கு சென்று நன்கு ரெஸ்ட் எடுத்தாள். அன்று எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டு இருந்த கயல், 5வர் இணைந்து எடுத்த படமது. தன்னையும் கௌத்தமையும் மட்டும் வைத்துவிட்டு, மற்றவர்களை தன் விரல்களால் மறைத்து ஜோடிப் பொருத்தம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தானாக கயலின் இதழ்கள் விரிய,
"என்ன கயல், தனியா பேசுற?? தனியா சிரிக்கிற?? நிறைய கற்பன உலகத்துல இருக்க?? என்ன நடக்குது?? " என்று ரேணு கேட்க,
"ஒன்னுமில்ல ரேணு. இன்று வழியெங்கும் கௌத்தம் சொன்ன நகைச்சுவைகளை நினைத்தேன்.." என்று ஓரிரு ஜோர்க் சொல்லி சிரித்தாள் கயல்.
கயல் சிரிப்பதை பார்க்க ரேணுவிற்கு சந்தோசமாக இருந்தது.
" கடவுளே, கயல் எப்பவும் இப்படியே சிரித்துட்டே இருக்கனும். அவள்ள யாரோ ஒருவன் சந்தோசப்படுத்துரான். அவன் கூட எப்பவும் இவள சேர்த்திவிடு " என்று மனதால் வேண்டிக் கொண்டாள்.

அன்றிரவு கௌத்தமிற்கு கயல் கோல் செய்த நேரம்,
"நாளன்டைக்கு ராம் வீட்டுக்கு போறதா ஒரு மெசேஜ் வந்தது. எனக்கு பயமா இருக்கு"
" ஏன்டி பயப்புட்ற??? நீ அவனுக்கு அநியாயம் செய்யல்லையே.. "
" இல்ல, அவன் வந்து.. அவன் பக்கம் நியாயம் இருக்கு. தன் பெற்றோர் செய்த தப்பிற்கு நா என்ன பண்ண??" என்று கேட்டா நா என்னடா சொல்ற?? மறுபடியும் ராம்ம என் மனசு நம்பும். அவன ஏத்துக் கொள்ளும். அவன்ட கல்யாணத்த நிறுத்திட வழி ஏதாவது செய்னு எனக்கு மனசு சொல்லும். நா கஷ்டப்பட்டு மாத்தின மனசு ஒரு நிமிஷத்துல மாறிறும்" என்று சொன்னாள் கயல்.

" நீ அவன்ன எவைட் பண்ணிட்டு வா. பேசிட்டு வந்தா ஒன்னும் பேசாதே. அவன் பேசுறதையும் கேட்காதே. உடனே எனக்கு கோல் பண்ணு.. " என்றான் கௌத்தம்.
" அதெப்படி முடியும்?? அது சரி ஏன் உனக்கு நா கோல் பண்ண?? எனக்கு அவன்ட கன்னத்துல ரெண்டு போடனும் போல இருந்தா...?? "என்று கேட்க,
" உடனே அவன்ன கண்டதும் ஓடிப்போய் கட்டிப்பிடிப்ப. இல்லன்னா அழுதுவ. உன்ன பத்தி தெரியாதா?? தோனினா அப்படியே கன்னத்துல போடு. நா உன்ன காப்பாத்த வர்ரேன்.. "என்றான்.
"என்ன காப்பாத்த தேவல்ல.. அவன்ன நீ வந்து ரெண்டு சாத்தே.. அவன்ட மண்டையால, கால், கை, முகத்தால எல்லாம் இரத்தம் வர்ர வரைக்கும் அவன அடிக்கனும்.. என்ட கோபம் முடியும்வர" என்றாள் கயல்.
" அடப்பாவி, என்ன கொலைக்காரனா ஆக்கப் போறீயா?? " என்று கௌத்தம் கேட்க,
" ஏன்டா எனக்காக அத கூட செய்ய மாட்டியா?? " என்று இமொஷனல்லா வினவினாள் கயல்.
" உனக்காக இத மட்டுமா?? ஏன் தூக்குல போட்டாலும் தொங்குறேனே" என்றான்.
அது வெறும் நகைச்சுவை பேச்சென்றாலும், தனக்காக என்ன வேணும்னாலும் செய்ய துணியும் கௌத்தமை நினைக்கையில் பெருமையும் வந்தது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now