💕 நீயே - 22 💕

118 11 13
                                    


"என்னம்மா இப்படி பட்டென்று சொல்றீங்க?? நா காலேஜ்ல இருக்க கிட்ட சொல்லவே இல்லையே.. யாரு?? எவரு?? எத்துன வயசு?? என்ன பண்றாரு..?? என்று குரல் தழுக்க கேட்டாள் கயல்.
" அப்பா சொன்னாரு கயல் எக்ஸாம் செய்றதால இத பத்தி ஒன்னும் சொல்ல வேணான்னு. மெட்ராஸ்ல இருக்காங்க. அவரு சொப்வெயார் இன்ஜீனியர். வயது 32. பெயர் குணால் சிவராஜ். பெரிய இடத்து சம்மந்தம் வேற "
"ஆனா அம்மா, என்ன கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்க விடுங்களேன்.."
"எவ்வளவு நாளைக்கு கயல்?? ராம் உன்ன விட்டு சென்று 7மாதங்கள் ஆகுது. அவன் மாதிரி எல்லா ஆம்புளையும் இருக்க மாட்டாங்களே.

உன்ன ஃபோட்டோல பார்த்ததும் குணாலுக்கும், அவங்க குடும்பத்துக்கும் உன்ன ரொம்ப பிடித்து போனதாம். நல்ல பையன். எங்களுக்கும் பிடித்துப்போனது. எங்களுக்கு விருப்பம்னா உனக்கும் விருப்பம்னு கடைசியா காலேஜ் போக கிட்ட சொல்லிட்டு போனீயே கயல்.. இப்போ என்னடா?? " என்று சொன்ன தாய்,
ஃபோட்டாவை கயலுக்கு காட்டினார்.
பார்க்கவே விருப்பமில்லாமல் ஏனோ
தானோ என்று பார்த்தாள்.

சுமார் உயரம், வெண்மை. உயரத்துக்கு ஏற்ப கொஞ்சம் தடிப்பு. கண்ணாடி போட்டிருந்தார்.
ஸும் செய்து பார்க்க தோனவுமில்லை.
"நல்லா விசாரித்துவிட்டோம். பையனையும், பையன் குடும்பத்தையும் ஒரு சிலர் பொறாமையால் சர்லன்னு சொன்னாங்க. மத்தபடி நல்ல ஆட்களாம்" என்று தாய் சொல்ல,
கயலிற்கு கேட்பவை எல்லாம் எரிச்சலாகவே இருந்தது.
சிவப்பு கலர் சாரிய கட்டும்மா என்று சாரியை வேறு கயலின் கையில் கொடுத்துவிட்டு சென்றார் கயலின் அம்மா.

கயலிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வொஷ் எடுக்க சென்று, டேப்பை திறந்து, கயலிற்கு போதுமானவளவு அழுதாள்.
அந்த நேரம் பார்த்து அபிக்குட்டியும் வந்தாள். வொஷ் எடுத்துவந்த  கயலிற்கு ஒவ்வொரு வித்தைகளையும், விளையாட்டுகளையும் காட்டி அவளது மைன்டை மாற்றிக் கொண்டு இருந்தாள்.

இரவுணவும் சாப்பிட்டிவிட்டு
களைப்பாக உள்ளது என்று பொய் சொல்லிவிட்டு கயல் தூங்க சென்றாள்.
ஃபோனை பார்க்க,
கௌத்தமிடமிருந்து ஒரு மெசேஜ்ஜும் இல்லை.
"டேய் எங்கடா இருக்க?? டைம்முக்கு போய்ட்டியா??" என்று மெசேஜ் போட்டுவிட்டு ஃபோனை மேசையில் வைத்தாள்.
தனக்கு துணையாக இருந்த தலையணையை கட்டிப்பிடித்து அழுதாள் கயல்.
"ஏன் எனக்கு இவ்வளவு சோதன??
முதல்ல இரண்டு வருஷம் ராம என்ட வாழ்க்கைல்ல அனுப்பி கசப்பான, ஜீரணிக்க முடியாத நிகழ்வுகள்.
அதிலிருந்து மீளவே இன்னம் முடியாம இருக்குது. அதற்கிடையில் கௌத்தம்... முதல்ல நல்ல ப்ரெண்டா அதன் பிறகு கொஞ்ச நாள் என்ட க்ரெஷ்ஷாக்கி, இப்ப லவ்வராகுற கட்டத்துல இப்படி கல்யாண ப்ரொபெசல் வந்து என்ட மனச கண்ணாடி மாதிரி உடைந்து விட்டதே.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ