💕 நீயே - 04 💕

366 12 7
                                    


பக்கத்தில் ராமை தவிர தெரிந்த யாரிடமும் அமர்ந்திருந்ததில்லை கயல். அப்போது கௌத்தம் அருகே அமர, ராமோடு அமர்ந்திருந்த நாட்களே அவளது கண்களில் வந்துபோனது.

ராம் படிப்பதற்காக காலேஜில் படிக்கும் ஹாலிற்கு வந்தால், கயல் தன் லெச்சர்ஸ் முடிந்து கோல் செய்து, எங்க இருக்க ராம்??? பக்கத்துல யாரு இருக்காங்க?? என்று கேட்பாள்.
படிக்கிற ஹால்ல இருக்கேன். சிலவேளை ப்ரென்ஸ் கூட இல்லன்னா தனியா இருக்கேன் என்று பதிலளிப்பான்.
ப்ரென்ஸ் கூட இல்லன்னா தனியா தான் இருந்தா ஓடோடி போவாள் கயல்.

போனாலும் கையை வைத்து சும்மா இருக்க மாட்டாள். ராமை சுரண்டிக் கொண்டு, அவனது கையோடு கை சேர்த்து, வந்ததில் இருந்து வளவளவென பேசிக் கொண்டு இருந்தாள். அதுமட்டுமல்லாமல் ராம்மை அணு அணுவாக அருகில் இருந்து இரசிப்பாள். முகத்தில் புதிய பிப்பள்கள், கைகளில் சிறு காயங்கள் என்பவற்றை கண்டால் ராமோடு சண்டை போடுவாள்.
"ஏன் ராம், கொஞ்சம் கூட கவனமா இருக்க மாட்டியா??? பாரு காயத்த??? எப்படி ஏற்பட்டது?? என்ன நடந்தது?? எப்ப நடந்தது?? வலிக்குதாடா???" என்று ராமை அக்கறையாக கேட்டு, காதலித்தே அவனை கொல்லுவான்.

"ஏன் ராம், மத்தவங்க. சமைக்க மாட்டாங்களா??? நீங்க இனி மரக்கறி வெட்டிக் கொடுக்க வேணா ராம். பாத்திரம், மரக்கறி கழுவிக் கொடுக்குறத மட்டும் செய்ங்க. அடுப்பு கிட்ட போகவும் வேணா.
கை சுட்டுப்படும்... நா கல்யாணம் பண்ணா உன்ன நல்லா பார்த்துக் கொள்ளனும். எப்படின்னா ஒரு பூ மாதிரி.." என்பாள் கயல்.
சிலவேளைகளில் அன்புத் தொல்லைகள் ராமிற்கு பெரும் தொல்லையாக விளங்கி, அவளது பாசம் விளங்காமல் ஏசுவதும் உண்டு. அப்படி ஏசினால், முகத்தை தூக்கி வைத்து கொள்வாள். ராம் கெஞ்சி கூத்தாடி தன்னை சமாதானம் படுத்தும்வரை.

இப்படியான அந்த அழகிய நினைவுகள் கயலின் கண்களில் அலைமோத,
கௌத்தமை மனது ஒருவேளை ராம்மாக கருதிவிடுமோ?? என்று ஒரு கணம் பயந்தாள்.
அவனை பார்த்துக் கொண்டே படிப்பித்தால் மனதில் தேவையற்ற ஆசைகள் வளர்ந்துவிடுமோ?? ஒர்வேளை சகபாடிகள் கேட்டது உண்மையாகிவிடுமோ?? என்றும்,
காயப்பட்ட இதயத்துக்கு மருந்து போட வந்தவனை இதயத்துக்குள் அப்படியே அனுமதித்து உரிமை கொண்டாட கொடுத்துவிடுவேனோ??? என்றும் பயந்தாள் அவள்.
மனசு குரங்கு மாதிரி
தாவி தாவி இருக்குமே...
தன் மனதில் புதிய எண்ணங்கள் எழவே,
தீடீரென்று ஏதோ நினைவுக்கு வர, அவளின் கற்பனைகள், எண்ணங்கள் கண்ணாடி துகள்கள் போல உடைய தொடங்கின.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Tahanan ng mga kuwento. Tumuklas ngayon