💕 நீயே - 42 💕

435 13 7
                                    


குழந்தையை எடுத்துக் கொண்டு கௌத்தம் கயலை பார்க்க சென்றான்.
கயலின் பக்கத்தில் குழந்தையை போட்டுவிட,
அழுது அழுது கைகளால் கயலிற்கு அடிக்க தொடங்கியது.
" கயல், பொண்டாட்டி.. எழும்புடி. நமக்கு பெண்குழந்தை தான் பொறந்திருக்குரா " என்று சொல்ல,
கண்ணை மெதுவாக திறந்து தன் பிள்ளையை பார்த்தாள் அவள்.
தன்னுடைய மூக்கையும், உதட்டையும், கௌத்தமின் கண்கள், முடி, நிறம் என்பவற்றை கலந்த ஒரு வடிவமாக இருந்தாள் காஜல்.
அன்று தான் கௌத்தமும், கயலும் மிகவும் சந்தோசமாக இருந்த இரண்டாவது நாளாகும். வீடியோ கோல் எடுத்து தன் குடும்பத்தினரிற்கு காட்டி, ஸ்வீட்டும் பங்கிட்டான் கௌத்தம்.
டிக்கட் வெட்டிவர, அக்கா வந்து பல உதவிகளை செய்து கொடுத்து,  அவங்க வீட்டுக்கு வர்ர நம்பிக்கையான வேலைக்கார அம்மாவையும் கயல்ட வீட்டுக்கும் அனுப்ப, கயலிற்கு அது பெரிய உதவியாய் போயிற்று.

என்று கதையை சங்கீதாவிடம் சொன்னாள் கயல்.
" இதுமாதிரி தான்டி என்ன இரண்டாவது பிள்ளைக்கும் பார்த்து கிட்டான். ஆனா இந்த தடவ வளைகாப்பு மட்டும் நடக்கல்ல." என்றாள் சிரித்தபடியே..
" நீ ரொம்ப லக்கி டி," என்று கௌத்தமை அவளும் புகழ, கயலிற்கு வானில் பறப்பது போல இருந்தது.
அப்படியே மகேஷ் சொன்ன விஷயத்தையும் கேட்டுக் கொண்டு, சங்கீதாவின் வற்புறுத்தலால் இரவுணவை சாப்பிட்டு  பிள்ளைகளோட கிளம்பினர்.

அடுத்த நாள் கௌத்தமின் ஊரிற்கு செல்ல தயாராகினர்.
கெப் ஒன்றை புக் செய்து, அத்த, மாமா, வேணிமார்கள், கௌத்தம், கயல், பிள்ளைகளும் கையசைத்து செல்ல, மனமின்றி கயலின் வீட்டினர் வழியனுப்பி வைத்தனர்.
போகும் வழியெல்லாம் கயல் கௌத்தமிற்கு ஒவ்வொரு இடமாக காட்டி,
" கௌத்தம், இந்த இடத்துல நாம இருந்து சாப்பிட்டும், இங்க அவங்கள்ள கண்டோம்," என்று பல இனிய சம்பவங்களையும், நினைவுகளையும் மீட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பல மணி நேர பயணம் என்றாலும் கொஞ்ச இடங்களில் இறங்கி பிள்ளைகளுக்கு காட்டி, சாப்பிட்டும், குடிக்கவும் செய்தனர். கயலும், கௌத்தமும் வெகுநாளைக்கு பிறகல்லவா இந்தியா வந்து இருக்கின்றனர். அதனால் வீதியில் இருந்த பொட்டி கடையில் ரொட்டி, சோளம், சூடச்சூட டீ, ரைஸ், பானிப்பூரி என்பவற்றை உட்கொள்ளவும் மறக்கவில்லை.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now