💕 நீயே - 19 💕

127 11 7
                                    


தன் வெள்ளை சுடிதாரை பாதுகாத்த கௌத்தமை தன்னை அறியாமலே பார்த்துக் கொண்டு இருந்தாள் கயல்.
"கயல், இந்தா சைக்கிள். நா போறேன். குடைய ஒழுங்கா புடித்துட்டு போடி" என்று சொன்னான் கௌத்தம்.
சரி என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு போகும்போது கௌத்தமை கயல் பார்க்க, கௌத்தமும் கயலை பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான். இன்னைக்கு தான் உன்ன பார்க்குற கடைசி தடவ.
மூனுமாசம் உன்னோட தான் ரைனிங் வருவேன். ஆனாலும் அதற்கு இன்னும் இரண்டு கிழமை இருக்கே.. என்னை கட்டிப்பிடித்து ஒரு பிரியாவிடை கொடுக்க கூடாதா??? என்று கயலின் மனம் ஏங்க தொடங்கியது.
ஏன் என்ட மனசு இவன்ட அணைப்பிற்காக ஏங்குது??
மகேஷ், ராஜ்  என்று மத்தவங்கள்ள இனி காணவே போறதில்ல. அவர்களிடம் இப்படியான பிரியாவிடையை மனசு கேட்டதும் இல்ல.
ஏங்கவுமில்லையே... என்று யோசிக்க, இன்னொரு யோசனை தலையில் ஓடிக் கொண்டிருந்தது.
நாளைக்கு அவன் சைக்கிள்ள எடுக்க வருவான் தானே. அதனால நா ஏன் வொரி பண்ணனும்?? இன்னொரு தடவ கௌத்தம்ம பார்க்கலாமே என்று மனம் சந்தோசமும் பட்டது.

யாரோடும் காணாத தூய்மையை
உன்னில் நான் காண்கிறேன்
முன் என்றும் இல்லாத ஆசைகள்
உன்னாலே நான் கொள்கிறேன்

வழியிலே இதயத்தின் நிழலாய்
நீள்கின்றாய் நான் ஓய
விழியிலே தெளிந்திடும் கடலாய்
ஆகின்றாய் என் செய்வேன் சொல்லடி

கௌத்தம் கயலை எண்ணியபடி போய் கொண்டிருந்தான்.
நீ அவ்வளவு இமோஷனல்லா பேசியும், உன்ன கட்டிப்பிடித்து, வீட்டுக்கு போய் அவசரமா வா என்று சொல்லிரக்கனும்டி. ஆனா
உன்ட அனுமதி கேட்டு அணைக்க மனம் இல்லடி.. என்று நினைத்தபடி சென்று கொண்டிருந்தான். ஒருவேள கேட்டிருந்தாலும் அனுமதி கொடுத்திருப்பீயோ??

தோழி தோழி
என்னருந்தோழி சொல்லடி

கயல் பேசியது போல் கேட்க, சந்திவரை சென்ற கௌத்தம் திரும்பி பார்த்தான். அந்த நேரமே கயல் ஹாஸ்டல் கேர்ட்டை தாண்டியும் இருந்தாள்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now