💕 நீயே - 21 💕

134 12 14
                                    


"கௌத்தம்... நீ எங்க இங்க..??" என்று தன் கண்களால் கண்டும் நம்ப முடியாமல் கயல், தன் கரத்தை மெதுவாக கிள்ளிப் பார்த்தாள்.
"என்னடி, இன்னைக்கு என் கைய கிள்ளாம உன் கைய கிள்ளி பார்க்குற??" என்று புதுமையோடு கேட்டான் கௌத்தம்.
"இல்ல நீயா இருந்தா பரவல்ல. ஆனா ஒருவேள நீ இல்லன்னா என்ன பண்றது?? மாயையாக இருந்தா, பக்கத்துல இருக்கிற மனுசன்ன தவறி கிள்ளிப்பட்டா?? என்ன நடக்கும்?? அந்த பயத்துல தான்" என்று கண்ணை பிரட்டிக் கொண்டபடி கேட்டாள் கயல்.
" இப்ப வேணும்னா கிள்ளிப்பார்க்கட்டா??" என்று குறும்பாய் கயல் கேட்க,
" ஒன்னும் தேவல்ல. இப்போ தான் கொன்ஃபோம் ஆகிட்டே நா தான்.. என்று.. " என்று கௌத்தம் வாயை ஒருபக்கம் வளைத்து சொன்னான்.
" அதுசரி, நீ எப்படி இங்க?? "என்றாள் சீரியசாக.
" கயல், ஏன்டி என்கிட்ட பொய் சொன்ன?? தனிய போறன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாமே. நா வந்து இருப்பேன். ஒருவேள உனக்கு ஏதாவது தொந்தரவுகள் நடந்திருந்தால்... எனக்கு.. எப்படி.. இருக்கும்டி?? இதெல்லாம் சின்ன விஷயமா?? மறைக்கிற விஷயமா?? " என்று கௌத்தம் கேட்கையில் அவனது கண்கள் கலங்கி இருந்தது.
அந்த கண்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத எதையோ கயலிற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

" என்னால ஏன் உனக்கு தொந்தரவு தரனும்?? யாருக்கும் நா தொந்தரவா இருக்க விரும்பல்லடா. அதான் " என்று இழுத்தபடி,
" அதுசரி, உனக்கு எப்படி இந்த பஸ்ல போறன்னு தெர்யும்? " என்று வினவினாள்.
" நா சங்கீதா கிட்ட கோல் பண்ணி கேட்டேன். அவ எல்லாத்தையும் சொன்னா. நீ தனியா போற, இந்த நேரம்னு. அதோட கிளம்பி வந்துட்டேன். உன்ட ஆட்டோக்கு பின்னால தான் வந்தேனும் கூட. " என்று சொன்னதும் அவளை நேசிக்கும் அளவை புரிந்து மனம் உருகியது. பேச வார்த்தைகள் அவளிடம் இருக்கவில்லை.
" கௌத்தம், நா கொஞ்ச நேரத்துக்கு முன்னம் திரும்பி பார்க்க கிட்ட நீ இருக்கல்லையே.. " என்று யோசனையோடு சொன்னாள் கயல்.
" நா ஏதாவது வாங்குவோம்னு போனேன். அந்த நேரம் பார்த்து நீ திரும்பி இருப்ப. கயல், என்னடி கண் எல்லாம் சிவந்து இருக்கு?? "
" அதான் போல.. உண்மையா சிவந்தா இருக்குதா?? " என்று ஃபோன் கமெராவை ஒன் செய்து கண்களை பார்த்தாள்.
" நேத்து நைட்ல தூக்கம் போகல்லடா. சரி யோசன எனக்கு. அதான் போல.. "
" எனக்கு ஒரு கோல் பண்ணி சொல்லி இருக்கலாமே. லூசு மாதிரி தனிய யோசிக்காம "
" கௌத்தம், நீ மட்டும் சரியான நேரத்துக்கு வரலன்னா.. அந்த மனுசன்... " என்று கண்கலங்க,
"அதான் நா வந்துட்டேனே" என்று சொல்லும்போதே, அவனின் அனுமதியை கேட்காமல்
கௌத்தமின் கைக்குள் தன் கையை சிறைப்படுத்தியவள், அவனது நெஞ்சில் அடைக்கலம் புகுந்தாள்.
கௌத்தமும் கயலின் தோளை பற்றி தன்னோடு அவளையும் சேர்த்து கொண்டான்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ