💕 நீயே - 15 💕

146 14 13
                                    

கயலின் உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தன.
தன்னை பெரும் தைரியசாலின்னு நினைத்துட்டு கூட்டிட்டு போறானே கௌத்தம் என்று எண்ணுகையில் ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது.
கௌத்தமை விட தனக்கு தான் இரத்தம், இன்ஜெக்ஷன் என்றால் பயம்னு அவன் அறிந்திருக்க இல்லையே..
சரி கடைசி வரை தைரியமாவே இருப்பது போல மைன்டைன் பண்வோம் என்று நினைத்துக் கொண்டாள் கயல்.

டாக்டரும் வந்திருந்தார்.
உள்ளே கௌத்தமை அழைத்தார் தாதி.
வா என்று அவளை அழைக்க, சரி என்று சற்றே பயந்தபடியே சென்றாள் கயல்.
"நா ஏன் பயப்படனும்?? கௌத்தமிற்கு தானே பல் கழற்ற வந்து இருக்கிறான். நா ஏன் சும்மா தடமாறனும்??" என்று  மனதிடம் சொல்லிக் கொண்டு
உள்ளே நுழைந்தாள்.

டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, "இந்த பல்ல சுலபமா கழற்ற முடியாது" என்று ஒரு எக்ஸ்ட்ரா எடுத்து வருமாறு சொன்னார்.
காலேஜ் டென்டலில் அந்த வசதிகள் இல்லாததால் டவுனுக்கு போக வேண்டி ஏற்பட்டது.
எதுல போறது என்று யோசிக்க, பக்கத்துல தானே பைக்ல போனா சரி, ஆனா
"கயல் என்னோட நீ வந்தா ஏதாவது பிரச்சனையா?? " என்று கேட்க,
" முடியாதுன்னு சொல்லி வாதிட இது சரியான நேரமில்ல. பக்கத்துல தானே. பரவல்ல" என்று பைக்கில் ஏறிக் கொண்டாள்.
ஐந்து நிமிட பயண தூரம், 5 செக்கன்களில் விரைவாக முடிந்தது. பிறகு எக்ஸ்ட்ரா எடுத்துவிட்டு, அதனை காட்ட, கழற்ற முடியும். எந்தவித பிரச்சினையும் இல்லை என்று டாக்டரும் சொன்னார்.
கௌத்தமிற்கு பயத்தால் வயிற்றை கிளப்பியது. இதுவர பல் கழற்றியதே இல்ல. முதல்தடவ. எப்படியிருக்கும் என்றும் தெரியல்ல.. ஆனா..
கயல் பக்கத்துல இருக்காளே என்று தைரியம் உண்டாகிற்று.

கௌத்தமை இருக்கையில் அமர்த்திவிட்டு,
இன்ஜெக்ஷன் எடுக்க போன டாக்டரின் பின்னால் சென்றாள் கயல்.
"டாக்டர்,இன்ஜெக்ஷன் அடிக்காம அந்த ஜெல் பூசி கழற்ற முடியாதா???"
என்று கேட்க,
"கயல், அதுவும் முடியும். சிலவேள ஜெல் பூசினாலும் திமித்தாது. அதான் பிரச்சின. ஏன்மா??"
என்று டாக்டர் கேட்க,
" இன்ஜெக்ஷன் அடித்தா வலிக்குமே டாக்டர். அதனால தான் நா சொல்றத கேட்டு ஜெல் பூசி பாருங்க. அப்படி திமித்தாட்டி இன்ஜெக்ஷன் அடிங்க டாக்டர்." என்று கேட்டுக் கொண்டாள்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now