💕 நீயே - 16 💕

142 10 6
                                    


"கௌத்தம், இவங்களெல்லாம் உங்க யாரு??" என்று ஒருவன் கேட்க,
"எல்லாம் என் சகபாடிகள் தான். இன்னைக்கு தான் மூனு வருஷத்துக்குமே இவங்க விளையாடவே வந்திருக்காங்க.. அவங்க போய் நீங்க.... என்று ஏதோ சொல்ல வந்து நிப்பாட்டிய கௌத்தம்,
" விளையாட வர்ர பொண்ணுங்க கிட்ட இப்படி நடந்திரவேணா" என்று ஹீரோ போல் கதையளந்தான்.
கயலையும், நண்பிகளையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

"கயல்.."
"சொல்லுங்க.. "
" என்னடி, இன்னைக்கு ரொம்ப சைலன்ட்டா வர்ர?? அதான் டைம்முக்கு நா வந்துட்டனே"
" இல்ல நீ வர்லன்னா ரெண்டு கொடுத்துருப்பேன்.. அதான் மிஸ் பண்டேன்னு கவலைப்பட்டுக் கொண்டு இருக்கேன்"
"அடி, நா வர கிட்ட அவன்ட முன்னால நீ பயந்து நடங்குறத தான் பார்த்தேனே.. சும்ம நம்ம கிட்ட மட்டும் உன்ட வாய காட்டு. " என்றான்.
" சரியாம்.. நீங்க பெரிய ஹீரோ நெனப்புல வந்து காப்பாத்தினாராம். இப்ப அதற்கு என்ன செய்ய?? பூமாலை போட்டு விடவா?? " என்று குறும்போடு கேட்டாள்.
" உனக்கு நக்கல் எனா?? இன்ன கொஞ்சம் நடுங்க வைத்து உன்ன காப்பாதிக்கனும் " என்றான் கௌத்தம்.

நாட்கள் பறந்தன.
இன்னும் ஒரே ஒரு நாள் காலேஜில்..

அன்று ரேணு, சங்கீதா என்று தன் நண்பிகளை அழைத்துக் கொண்டு ஸ்டடி ஹாலிற்கு பக்கத்தில் இருந்த ஹாலிற்கு போனர்.
"இந்த இடம் நினைவு இருக்கா??? மூனு வருஷத்துக்கு முன்னர்?? "
" ஆம்டி.. இங்க தானே நமக்கு ரெகிங் நடந்தது.."
" சீனியர் அக்கா, அண்ணாமார் ஒவ்வொருவரா அழைத்து பெயர் கேப்பாங்க. சீனியர் அண்ணன்மார்ட கண்ல அழகா தெரிந்தா மேலும் டீடைல் கேட்டு செட் ஆகி கொள்வாங்க.."
"ஆம்டி. ஆனாலும் நம்மள்ள யாருமே சீனியர்ஸ் கூட செட் ஆகல்லையே. "
" பார்க்குற மாதிரி ஒரு சீனியர் மூஞ்சும் இருக்கல்லையேடி" என்று சிரித்தாள் கயல்.

" நம்மள ஒவ்வொரு வரிசையா நிப்பாட்டி பக்கத்துல இருக்கிறவங்கட டீடைல் எடுக்கனும். அவங்க முழுப்பெயர், ஊர், அம்மா, அப்பா என்ன தொழில் செய்றாங்க, சிவில்லா, மெகனிகல்லா, இலெக்ரோனிக்கா?
அவங்க தர்ர நேரத்துள்ள இதெல்லாம் பாடமாக்கியும் இருக்கனும். ஒவ்வொருவர்கிட்டயும் வந்து விசாரித்து, பக்கத்துல இருக்கிற பெண்கள் அதாவது நாங்க சொல்லன்னா போய்ஸ்ஸுக்கு அடிப்பாங்க.
பக்கத்துல இருந்தவர்களை நினைவுபடுத்தும் போது தான் நினைவுக்கு வந்தது.
கயலின் பக்கத்தில் மகேஷ், கௌத்தம், ராஜ் ஆகியோரும் இருந்தனர் என்று ஞாபகம் வந்தது.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now