மகதி எழுந்து போய் அவுங்க அம்மா பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..
" அம்மா எதாவது பேசுமா " என்றாள் பாவமாக...
" அர்ஜூன் இவள அமைதியா இருக்க சொல்லு.. " என்றார் எரிச்சலாக..
" அம்மா நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அதுக்கப்புறம் என்ன வேணா பண்ணு"
" அர்ஜூன் இதெல்லாம் சரிப்படாது.. உங்க அம்மா அப்பாவ வரச் சொல்லு.. உனக்கும் அவளுக்கும் வர முகூர்தத்திலே கல்யாணம் " என்றார் கோவமாக..
இதைக்கேட்டதும் மகதி சிலையாகிப் போக.." அத்தை என்ன பேசறீங்க.. எதுக்கு இவ்ளோ அவசரப்படறீங்க.." என்றான் கோவமாக..
" நீயும் பார்த்துட்டு தான இருந்த.. அவன் பேசுனத.. எவ்ளோ திமிரு.. மகதியோட அப்பாவ பார்த்தா இந்த ஊரே பயப்படும்.. அவ கைய நீட்டி பேசுறான்.. எல்லாம் நான் பெத்து வெச்சிருக்க தெண்டத்துனால தான்.. " என்று சொன்னதோடு நில்லாமல் அவள் முதுகிலும் பலத்த அடி ஒன்றை பரிசளித்தார்..
' பாலா ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டான்..பாலாவின் நல்ல மனசை பார்த்துதானே அவனை விரும்பினேன்.. ஆனால் பெரியவர்களிடம் அதுவும் என் அப்பாவிடம் அப்படி நடந்து கொள்ளும் அளவிற்கு ஆத்திரம் அவனது கண்ணை மறைத்துவிட்டதா.. திருமணத்தை மறுக்கும் சந்தர்பத்தைக் கூட அளிக்க முடியாதவாறு என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டானே " என்று மனதில் நினைத்துக் கொண்டு " அம்மா ப்ளீஸ்மா " என முடிக்கும் முன்னமே..
அவளது தாயே தொடர்ந்தார்.." வாயத்
தொறந்தா கொன்றுவேன்.. நீ இடங் கொடுக்காமலா.. அவன் நீ தான் அவன் பொண்டாட்டினு அத்தனை பேருக்கு முன்னாடி சொல்லிட்டு அர்ஜூனையும் அடிச்சிட்டு போவான்.. அர்ஜூன் நீயும் இவளுக்கு சப்போர்ட் பண்ணினா..இவ அப்பா என்ன தான் ஏசுவார்.. பார்த்து நடந்துக்கோ.. " என்று சொல்லி சமையலறைக்குள் புகுந்து கொண்டார்..மகதிக்கு இதைக்கேட்டு சந்தோசப் படுவதா.. இல்லை வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை..
![](https://img.wattpad.com/cover/111627227-288-k466495.jpg)
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..