பாகம் 8

7.5K 331 162
                                    

கிருஷ் ஆபிஸ்க்கு வந்து ஒரு வாரம் ஆனது..ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஆபிஸே தலை கீழானது..

இந்திரா மேமோட ஆபிஸா இது என்ற அளவுக்கு அங்கே வேலை செய்பவரின் நடத்தையும் உடையும் மாறிப் போனது..அங்கே இருப்பவர்க்கும் இந்த மாற்றம் தான் பிடித்து இருந்தது மகதியைத் தவிர..

மகதிக்கு கிருஷைப் பார்த்தால் வெறுப்பு தான் வந்தது.. அதுவும் அவன் பெண்களிடம் பழகும் விதம் அவன் மோசமானவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது..

 அதுவும் அவன் பெண்களிடம் பழகும் விதம்    அவன் மோசமானவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.

இருக்காதா பின்ன .. தன்னை பிஏ என்று சொல்லி கையை நீட்டுவதற்கே யோசித்த மகதியை ' ஹலோ டார்லிங் என்று சொல்லிக் கட்டிப் பிடித்தால் வெறுப்பு வராமல் வேற என்ன வரும்..அதிலிருந்து மகதி அவனிடம் இருந்து 5 அடி தள்ளியே நிற்பாள்..

கிருஷிடம் உள்ள உயர்ந்த குணம் என்னவென்றால் தன்னிடம் விலகி இருப்பவரை தொல்லை செய்ய மாட்டான்.. அந்த வகையில் மகதி தப்பித்தாள்..ஆனால் எவ்வளவு நாள் தான் தப்பிப்பாள் என்பது தெரியவில்லை..

எதற்கெடுத்தாலும் சண்டை போடும் மகதி இவன் முன்னே வாயைத் திறக்கவும் தயங்கினாள்..

பேசாமல் இந்த வேலையை விட்டு விடலாம் என்று எண்ணினாலும் இந்திரா மேம் காகவும் ஊருக்குச் சென்றால் தந்தை தனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்ற பயத்திலும் பொறுமையுடன் இருந்தாள்

ஆனால் அந்த பொறுமையை கிருஷின் மோசமான நடவடிக்கை தகர்த்தெறிந்தது..

தன்னுடன் சிரித்து பேசும் பெண்களுக்கு மட்டும் இன்கிரிமென்ட் கொடுத்தான்..மேனேஜர் கூட இதைக் கண்டுக்கவில்லை..இந்திரா பார்த்து பார்த்து உருவாக்கிய கம்பெனி இப்படி தரங்கெட்டு போவதை மகதி விரும்பவில்லை..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang