மகதி போனை எடுத்துக் கொண்டு திருட்டுத் தனமாக மாடிக்குச் சென்று அட்டன்ட் செய்தாள்..
அத்தை நீங்க சொல்ற மாறியே நடந்துக்கிறேன்.. எனக்கு நம்ப குடும்ப மானம்தான் முக்கியம்.. அத்தானுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் . இவ்வாறு அவள் பேசிக் கொண்டு இருக்க அவள் பின்னிருந்து பாலா ஒரு கையால் அவளது வாயை பொத்திவிட்டு மற்றொரு கையால் போனை பிடிங்கி தன் காதில் வைத்துக் கொண்டான்..
அவனது திடீர் நெருக்கத்தில் உறைந்த மகதி தன்னிலை அறிந்து அவனிடமிருந்து விடுபட தனது வாயிலிருக்கும் அவனது கையை எடுக்க முயற்சித்தாள்.. அவ்வளவு சீக்கிரம் அவனது இரும்புப் பிடியிலிருந்து தப்பிக்க முடியுமா..இருந்தும் போராடிக் கொண்டு இருந்தாள்..அவன் அதனைப் பொருட்படுத்தாமல் ஜானகியின் கூற்றுகளை கேட்டுக் கொண்டு இருந்தான்..
' அத்தை எதும் பேசிடாதிங்க.. ஐயோ நான் என்ன பண்றதுன்னே தெரிலயே.. எப்படி இவர்கிட்ட இருந்து தப்பிக்கிறது.. ஐடியா ' என நினைத்துக் கொண்டு பாலாவின் கையை நறுக்கென கடித்து விட்டாள்..
இவளது திடீர் செயலால் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாரித்துக் கொண்டு அவளை நகர முடியாதவாறு தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டு் தன் வேலையைக் கவனித்தான்..
மகதிக்குத் தான் கைகால் எல்லாம் ஆட்டம் கண்டு வி்ட்டது.. இருந்தாலும் தன் முயற்சியை தளர விடாமல் மீண்டும் கடித்துக் கொண்டே இருந்தாள்..
அடுத்து அவன் பேசிய வார்த்தைகள் மகதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...
" எனக்கு என்னோட தம்பி தான் முக்கியம்.. உங்க பையன் உங்களுக்கு முழுசா வேணும்னா நான் சொல்றத கேட்டாகனும் புரியுதா.. உங்க கிரிமினல் மைன்ட யூஸ் பண்ணி உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசப்பட்டிங்க.. அப்ரோம் நடக்கிற விபரீதத்துக்கு நான் பொறுப்பேற்க முடியாது.." என்றான் சிரித்துக் கொண்டு..
" சரி சரி நான் என் செல்ல பொண்டாட்டிக்கிட்ட தரேன் நீங்க பேசறீங்களா என முடிப்பதற்குள் லைன் கட்டாகி விட்டது... மகதி கடிப்பதை நிறுத்திவிட்டு தனது முழு பலத்தையும் காட்டி அவனை தள்ளி விட்டாள்.. அவள் செய்கையில் கோவமாகி அவளைத் தண்ணீர் தொட்டியின் மீது சாய்த்து அவளின் இருபுறமும் தன் கைகளை வைத்துக் கொண்டான்..
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..