சுஜி பயந்து என்ன செய்வெதன்று புரியாமல் தவித்தாள்.. " கிருஷ் அத்தை எதையோ மறைக்கிறாங்கடா.. இங்க வா " என்று கத்திக் கொண்டே அவனிடம் ஓடினாள்..
முதலில் அவன் நம்ப மறுத்தாலும் சுஜியின் பதற்றத்தைக் கண்டு நம்பினான்.. வேகமாக ஜானகியின் கதவினைத் தட்டினான்.. கதவு திறக்காமல் இருப்பதால் தன் பலம் முழுவதையும் பயன்படுத்தி நான்கைந்து அடியில் கதவினைத் திறந்தான். அங்கே அரை மயக்க நிலையில் ஜானகி தரையில் படுத்திருந்தார்..
அரை நொடி கூட தாமதிக்காமல் அவரைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.. அதற்குள் சுஜி காரை எடுத்துவர அவன் பின்புறம் ஜானகியை படுக்க வைத்து அவனும் அமர்ந்து கொண்டான்..
கார் மின்னல் வேகத்தில் பறந்தது..
" அம்மா எந்திருங்க.. " என்று கூறி கன்னத்தில் தட்டிக் கொண்டே வந்தான்.." எ.ன்.ன வி.டு.. நா.ன் யா.ரு.க்.கு.ம் பா.ர.ம் " என்று எதையோ பிதற்றினார்..
" உனக்கு இப்ப சந்தோசமா கிருஷ்.. உன்ன நம்பித்தான மாமா விட்டுட்டு போனாரு.. என்ன பன்னப் போற.. இப்ப உனக்கும் அத்தைக்கும் என்ன வித்தியாசம் " என்று சுஜி தனது ஒட்டுமொத்த கோபத்தையும் திரட்டிக் கூறினாள்.." ப்ளீஸ் சுஜி.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.. எதுவும் சொல்லிடாத.. வேகமா போ " என்று அழுதுகொண்டே கூறினான். அடுத்து சில நிமிடங்களில்
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார் ஜானகி..
இரண்டு மணி நேர தீவிர ஆய்வுக்குப் பிறகு அவர் எடுத்துக் கொண்ட விசம் அவர் உடம்பில் ஏற்கனவே இருந்த நச்சுப் பொருளோடு வினை புரிந்து அவரின் நிலைமையை இன்னும் மோசமாக்கியது எனத் தெரிய வந்தது.. ஆனால் அவருக்கு என்ன சிகிச்சை அளிப்பதென்று மருத்துவர்களும் புரியாமல் தவித்தனர்..கிருஷின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது. தன்னால் தான் இவ்வாறு நடந்தது எனக் குற்றவுணர்வில் செத்துக் கொண்டிருந்தான்..
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
பாலா வேகமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்த வேளையில் சுஜியிடமிருந்து அழைப்பு வந்தது..
ஜானகியின் நிலையைக் கேட்டு அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. கோபமாக மாலதியைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் காரைச் செலுத்தினான்..

DU LIEST GERADE
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Aktuelle LiteraturHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..