பொன்னெழில்.. பெயருக்கு ஏற்றமாறியே பசுமை கொஞ்சும் ஊர்..
அந்த கிராமத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த செல்லப் பெண்தான் ஜானகி...எந்நேரமும் சிரித்த கலையான முகம்தான் அவளது அடையாளம் .. தன்னை விட 3 வயதே சிறிய பெண்ணாக இருந்தாலும் பிறந்த உடனே தாயை இழந்த இந்திராவிற்கு தாயாக மாறி அவளை அரவணைப்பவள்..
அதனாலே தான் மாணிக்கத்திற்கு ஜானகியென்றால் தனி மரியாதை.. அவரைத் தன் தாயின் ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தினான்..
இயற்கையிலே இளகிய மனம் படைத்த ஜானகி, தனக்கு பிறக்கப் போகும் குழந்தைப் பற்றி நிறைய கனவுகள் கொண்டிருந்தாள்.. பிரசவநாளும் நெருங்கிக் கொண்டிருந்தது..
தனது சகோதரியை பார்க்க இந்திரா வந்திருந்தாள்.. தனது காதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.. ஜானகியும் உதவி செய்யவதாக ஒத்துக் கொண்டாள்..
ஜோசப் வேறு மதத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும் நல்லவர். ஆனால் அவரது தாயாரும் சகோதரியும்
குணத்தில் அந்தளவுக்கு சிறந்தவரல்ல..இருவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கிவரும் போது இந்திரா தடுக்கிவிழப் போக, தாங்கிப் பிடிக்கச் சென்று தவறுதலாக கீழே விழுந்து விட்டார்..
.
.
.
.
மண்ணை வந்தடையாத அந்த சிசுவினை காரணம் காட்டி இந்திராவினை அனைவரும் மனதால் கொலை செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் அந்த நிலையிலும் கூட ஜானகி இந்திராவிற்காக " போதும் நிறுத்துங்க.. இந்துவும் என் பொண்ணுதான்.. தயவுசெஞ்சு அவளை ஒன்னும் சொல்லாதிங்க.."
என்று பரிந்து பேசினார்...
VOCÊ ESTÁ LENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficção GeralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..