டேய் லூசு என்னடா உனக்கு ஆழ்ந்த யோசனை.. இங்கப் பாரு பால் பாயாசம்.. எங்க அத்தை செஞ்சது .. உனக்கும் வேணுமா .. செமையா இருக்கு என்று புகழ்ந்தபடியே கிருஷின் அருகே வந்து அமர்ந்தாள் சுஜி..
அவளின் வருகையால் சுயநினைவு அடைந்தவன் " என்ன திடீர்னு " என்றான் வேண்டாவெறுப்பாக.
அவன் தலையில் கொட்டிவிட்டு " இன்னைக்கு உங்க அண்ணிக்கு பொறந்த நாளாம்.. அதான் இங்க நமக்கு விருந்து " என்றாள்
" பரவாலியே உங்க அத்தைக்கு இதுக்கெலாம் நேரம் இருக்கா..எப்பவும் யாருக்கு என்ன கெடுதல் பண்லாம்னுல நினைப்பாங்க "
என்றான் எரிச்சலாக..டேய் நீ ரொம்ப பண்றடா.. அதான் அவுங்க சுயநினைவு இல்லாம பண்றாங்கனு தெரிஞ்சும் நீ வில்லனாட்ட அதையே பேசற.. உன்னை எனக்கு பிடிக்கலடா..
என்று பொய்யான கோபத்துடன் சொன்னாள்..நான் உனக்கு வில்லனா.. அதெப்படி வந்த ஒரு நாள்ளயே உன்னை நல்லா பிரைன்வாஸ் பண்ணிட்டாங்க.. கொலை பண்ணத் தெரிஞ்சவங்களுக்கு இதெலாம் சாதாரணம் இல்ல..
கிருஷ் ஏன்டா இந்த மாறி பேசற.. அவுங்கள நானும் தப்பாதாண்டா நினைச்சேன்..ஆனா அவுங்க குழந்தை மாறிடா.. பாசத்துக்காக ஏங்குறாங்க..அது உனக்கு புரியலையா.. நீ அவுங்கள ஏத்துக்கிட்டா மத்தவங்கள அவங்க எதும் பண்ண மாட்டாங்கடா.. ப்ளீஷ் என்றாள் பொறுமையாக அவனுக்குப் புரியும்படி
கிருஷ் யோசிக்கத் துவங்கினான்..
அந்த நேரத்தில் ஜானகி சுஜியை கைஜாடையால் அழைத்தார்..சுஜி எழுந்து அவர் அருகில் சென்று என்னவென்று கேட்டாள்..
VOCÊ ESTÁ LENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficção GeralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..