பாலா கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டவள் "ஏன் உங்க க்ளோஸ் பிரண்ட் மாலுக்கு உங்க வீட்ல தங்க இடமே இல்லையா.. ஏன் எங்க வீட்ல இருக்க சொல்றீங்க.. " என்று பொறிந்து தள்ளினாள்..
நான் சொன்னா கேட்பியா மாட்டியா
என்று அவன் கோபமாக கேட்கவும்கேட்கிறேன்.. கேட்டுட்டு தான இருக்கேன்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. நீங்க எனக்கு மட்டும் எப்பவும் ஓரவஞ்சனை பண்றீங்க.. அது ஏன்னு எனக்குப் புரியல.. ஒருவேளை உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனா இப்பவே சொல்லிடுங்க.. நான் உங்க லைப்ல டிஷ்பர்ன்ஸா வர மாட்டேன்..
என்றாள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி...அப்படிலாம் இல்ல மகதி..நீ நான் சொல்றத முழுசாக் கேளு
நான் இன்னும் பேசி முடிக்கல.. என்னைப் பார்க்கதான் இங்க வந்தீங்கன்னு இப்ப தான் சொன்னீங்க.. ஆனா அதுக்குள்ள மாலதிய இங்க தங்க வைக்கதான் வந்திருக்கிங்கன்னும் சொல்றீங்க..
நீங்க பண்றத எதையும் எங்கிட்ட சொல்றது இல்ல..
நான் எப்பவும் லூசு மாறி பேசறதால எனக்கும் மனசே இல்லைனு நினைச்சிட்டிங்களா.. நான் என்ன மத்தவங்க மாறி எப்பவும் அது வேணும் இது வேணும்னு தொல்ல பண்றனா..
இல்ல எங்கோட மட்டும் தான் பேசனும்னு ரூல்ஸ் போடறனா.. ஜஸ்ட் எனக்காக ஒரு 5 நிமிசம் ஒதுக்க மாட்டிங்கிறீங்கன்னு தான கேட்கிறேன் ..நான் ஒத்துக்கிறேன் இப்ப நம்ப குடும்பத்துல நிறைய பிரச்சனை இருக்கு.. அதுனால தான் நான் உங்கள தொந்தரவு பண்ணாம இருந்தேன்.. ஆனா நீங்க என்னைப் பொருட்டாவே நினைக்கிறதே இல்ல...
" ஐயோ மகதி " என அவன் தடுக்கவும்
நான் பேசி முடிச்சிடறேன்.. அப்புறம் எதாவது சொல்லி என் வாய அடைச்சிடறீங்க.. நான் அப்படி என்னப் பண்ணேன்.. உங்களுக்காக நான் ஒவ்வொரு தடவையும் பொறுமையாக இருக்கிறேன்.. ஆனா அதையே அட்வேன்டேஜா எடுத்துக்கீறிங்க.. உங்களுக்கு பிடிச்ச மாறி மாற நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க.. சொல்லுங்க " என்றாள் கண்களில் நீர் நிறைந்தபடி..
ESTÁS LEYENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficción GeneralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..