தெரியும்.. தெரியும்.. நீ ஓவரா சீன் போடாத..பாருடா..நாங்க சீன் போடறமா... பங்சனுக்கு வாங்குன டிரச இப்ப போட்டுட்டு இருக்குறவுங்களுக்கு பேரு என்ன..
அவள் முகம் மாறவும் " ஏய் சும்மா தான் சொன்னேன்.. ஏன் மூஞ்சி சுருங்கிப் போச்சு.."
" அது வந்து .. நான் உங்கிட்ட ஒன்னு சொன்னா நீ கோவிச்சக்க கூடாது.. "
சுஜி" அப்ப எதோ பெரிய நியூஸ் தான் வெச்சிருப்பே.. சொல்லு..முடிஞ்சா டென்சனாகறத கொறச்சிக்கிறேன்.. " என்றான் ..
" அது வந்து பாலா மாமா என்கேஜ்மென்டுக்கு என்னால வர முடியாது.. அன்னைக்கு எனக்கு டெல்லில ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு... நான் கண்டிப்பா போய் தான் ஆகனும்.."
என்ன சுஜி.. நீ இல்லாம எப்படி..அண்ணாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் என்ன தான் திட்டுவாரு..நீ வர அவ்ளோ தான் புரிஞ்சுதா..
நான் மாமாட்ட பேசிட்டேன்.. அவரும் ஒத்துக்கிட்டாரு.. நீ தான் கோவப்படற..
போடா..தனியா எப்படி போவ.... அதான் ரொம்ப பயமா இருக்கு..ஏற்கனவே ஒரு நாள் உன்னை தனியா விட்டதுக்கு இப்ப வரைக்கும் வலிய அனுபவிச்சிட்டு வரேன்.. மறுபடியும் அதே தப்ப பண்ண மாட்டேன் டி..
லூசு.. உடனே உன் கற்பனைக் குதிரைய தட்டிவிடாத.. நீயே என்னை தொரத்தினாலும் நான் போக மாட்டேன்.. ப்ளீஸ் எனக்கு இந்த ஒரு டைம் மட்டும் பர்மிசன் தாடா.. என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்..
சரி சரி போய்ட்டு வா.. எப்ப கிளம்புற..-கிருஷ்..
இதோ இன்னும் அரை மணி நேரத்துல..
அடிப்பாவி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டு வெறும் பேச்சுக்கு என்கிட்ட பர்மிசன் கேக்கிறீயா..பிராடு..
ஆமா இவரு பெரிய துரை.. உங்கிட்ட கேட்டுதான் எல்லாமே முடிவு பண்ணனுமா..போடா புடலங்கா..என சந்தோசமாக சிரித்துக் கொண்டே கீழே இறங்கினாள்..

அடியேய் நான் உனக்கு புடலங்காயா.. போடி வெள்ளைப் பன்னி.. பிசாசு..ராட்சசி..........
VOCÊ ESTÁ LENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficção GeralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..