பாகம் 3..

10.5K 298 48
                                    

வருண பகவானும் வாயு பகவானும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்த தார்ச்சாலையையே கூவம் ஆற்றைப் போல மாற்றிக் கொண்டிருந்தனர்.

மாலை 4 மணி இரவு 7 மணி போல காட்சியளித்தது.

சுஜி ரொம்ப டென்ஷனாக போக வர இருந்த வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்டுக் கொண்டு இருந்தாள்.ஆனால் ஒருத்தரும் நிறுத்தவில்லை..

அப்போது தான் பாலா வந்தான்.. ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவளால் அடையாளம் காண முடியவில்லை..

 ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவளால் அடையாளம் காண முடியவில்லை

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.


' சார் என் பிரண்ட்டுக்கு உடனே இந்த மருந்து தேவைப்படுது.. ப்ளீஸ் கொஞ்சம் என்ன அண்ணா நகர்ல டிராப் பண்ணுங்க..என கூற

பாலா இப்போதுதான் ஹெல்மெட்டை கழட்டினான்..அவன் பார்வையே அவன் சொல்ல வந்ததை உணர்த்தியது..

சுஜியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..

" சார் அன்னைக்கு நடந்ததுக்கு நா சாரி கேட்டுக்கொள்கிறேன்

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.

" சார் அன்னைக்கு நடந்ததுக்கு நா சாரி கேட்டுக்கொள்கிறேன்.. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. எவ்வளவு பணம் வேணாலும் தரேன்.ஒரு உயிர காப்பாத்துன புண்ணியம் கிடைக்கும்.."

அவள் பொய் சொல்லுவதாக தோன்றவில்லை..அவனும் உதவினான்..

அங்கே சுஜியின் தோழி கங்காவுடைய அப்பாவிற்கு ஹார்ட்அட்டாக்.. மழையினால் ஆம்புலன்ஸால் வர முடியவில்லை. ஆனால் எல்லோரும் சாதாரண நெஞ்சு வலி என்று தான் நினைத்து இருந்தனர்..
பாலா அவரின் நிலை அறிந்து சிகிச்சை அளித்து அவர் உயிரைக் காப்பாற்றினான்..

அவளுடைய தோழி் தந்தையினது உயிரைக் காப்பாற்றியதற்கு அவள் தோழி நன்றி கூறினாள்..

பாலா சுஜியை அருகில் அழைத்தான்..அவளும் ரொம்ப சந்தோஷமாக வந்தாள்..

அவன் எதிர்பாரா விதமாக ஓங்கிக் கண்ணத்தில் அடித்து விட்டான்..

சுஜிக்கோ தலைக்குமேல் வண்ண வண்ண விளக்குகள் எரிந்தன..

" உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க.. ஒருவேளை நீ அன்னைக்கு மாறி பொய் சொல்றின்னு உன்ன விட்டுட்டுப் போய் இருந்தா இவரோட நிலைமை என்ன.... அன்னைக்கும் உன்னால தான் ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணாம போய்ட்டேன்..
இன்றைக்கு நீ நின்ன நிலைமைல தான் அந்தப் பொண்ணும் நின்னா..
நல்ல வேளை அவ சரியான நேரத்தில வந்துட்டா.. இல்லைனா என்னால தான் ஒரு உயிர் போய்டுச்சுனு கடைசி வரை நான் பீல் பண்ணிட்டே இருந்திருப்பேன்.."

" சார் சாரி "- சுஜி

" உன் சாரிய நீயே வெச்சுக்கோ.. அடுத்தவங்களுக்கு உதவி செய்யாட்டியும் பரவாயில்லை.. மத்தவங்க செய்ற உதவிய தடுக்காம இருந்தா போதும்.."
என்று சொல்லி விட்டு அவள் பதிலைக் கூட எதிர்பாராமல் சென்று விட்டான்..

" அந்த அண்ணா ரொம்ப நல்ல கேரக்டர்ல" - கங்கா..
அவளும் ஆமென்று தலையாட்டினாள்..

" உன் முகத்தைப் பார்க்கும்போது அவரை உனக்கு பிடிச்சிருக்கு போல " என அவள் தோழி கேலியாக கேட்க

ஒரு அர்த்த சிரிப்பை உதிர்த்தவள்
" ஹலோ எனக்கு ஆல் ரெடி ஆள் இருக்குறது உனக்கு தெரியாதா.. போடி போய் அப்பாவ போய் பாரு "என்றாள்-சுஜி..

_______________________________

லேடிஸ் ஹாஸ்டல்...
"ஏய் மகதி உங்க அப்பாகிட்ட இல்லாத பணமா.
ஏன்டி 5 ரூபாய் 10 ரூபாய் க்காக எல்லோர்ட்டயும் சண்ட போடுற"-அனு

ஏன்டி 5 ரூபாய் 10 ரூபாய் க்காக எல்லோர்ட்டயும் சண்ட போடுற"-அனு

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.

"ஹலோ நான் ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி கஞ்சம்லாம் இல்ல.. சிக்கனமா இருக்க " - மகதி

" நம்பிட்டேன்"

" அடி போடி அப்டி இல்லைனா இந்த உலதத்துல பிழைக்க முடியாது.. "

" இதெல்லாம் ஒழுங்காக பேசு.. இன்டர்வியூல கோட்டை விட்ரு.. நாளைக்காவது வேலை கிடைக்குமா "அனு

" அத மட்டும் நியாபகப் படுத்தாத டீ பயமா இருக்கு .. குட் நைட்.." என்றவள் தனது தந்தையிடம் பேச அலைபேசியினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் ..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin