பாகம் 38

6.1K 226 82
                                    

தன்னால் எவ்வளவு வேகமாக காரினைச் செலுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான் கிருஷ்..
எங்கே போகிறோம் என்பதைக் கூட அறியாமல் நீளும் சாலையினில் தனது  பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் ..

சூரியனின் ஆதிக்கம் குறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அருகிலிருந்த கல்லில் அமர்ந்தான்..

தனது அன்னையும் சரி தந்தையும் சரி பாலாவை விட எப்போதும் தன்மீதே அதிக அக்கறையும் அன்பையும் கொண்டுள்ளார்கள் என்பதை தெரிந்த போதும் அந்த அன்பிற்கு நான் தகுந்தவன் அல்ல.. அது அர்ஜூனின் இடம் என்பதை அறிந்த போதே பாதி உயிர் சென்று விட்டது..தன் தாய் என்ற பேயால் இதுவரை அர்ஜூன் அனுபவித்த கொடுமையையும் தன் மகனின் காதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதுவரை தான் எடுத்து வளர்த்த பையன் என்றுகூட பாராமல் அவனைக் கொல்ல நினைத்ததையும் எண்ணும் போது எஞ்சியிருந்த மீதி உயிரும் போனது..
தான் சுஜி மேல் கொண்ட காதலில் எள்ளளவும் சந்தேகமில்லை.. ஆனால் அந்தக் காதலினால் தான் சுஜி, இரண்டு வருடம் உள்ளே அழுதும் மற்றவர் முன்பு துறுதுறுவென்று நடித்துக் கொண்டும் நரக வேதனையில் வாழ வேண்டியதாயிற்று.. அதனை எண்ணும் போதே எல்லா குழப்பங்களுக்கும் ஆதிமூலமாக நான் தானே இருக்கிறேன் என்று அவன் மேலே எல்லாப் பழியும் போட்டுக் கொண்டான்..

இதுவரை அர்ஜூன் அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் சேர்த்து இனி சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கு நான் அனைவரிடமிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று தவறான முடிவினைத் தேர்ந்தெடுத்தான்.. இந்த அனைத்து உண்மையும் தெரிந்தும் பாலா அமைதி காத்தது தனக்காகத் தான் என்று தெரிந்தும் அவனை வேண்டுமென்றே இன்று காயப்படுத்தி வந்தான்..

சுஜி இந்நேரம் அனைத்து உண்மையும் தெரிந்து என்னை வெறுத்திருப்பாள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவள் எவ்வாறு மீண்டு வருவாள் என வருந்தினான்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora