பாகம் 39

6.2K 221 83
                                    

இருவரும் வீட்டை நெருங்க மணி எட்டானது..விசேசத்திற்கு வந்த தூரத்து உறவினர்களெல்லாம் சென்றிருக்க.. நெருங்கிய உறவினர்கள் மட்டும் சொந்த கதை சோக கதையினை அளந்த படி இருந்தனர்..

கிருஷ் வாசலினைத் தொடும்போதே " அங்கேயே நில்லுங்க ரெண்டு பேரும் " என உரக்கக் கத்தினார் இந்திரா..

கிருஷ்  இந்திராவை பாவமாகப் பார்த்தான்.. ஜோசப் அவரின் மனநிலையை உணர்ந்தபடி " இப்ப என்னாச்சு.. அதான் வந்துட்டோம்ல " என அதட்டினார்..

" ஏன் சொல்ல மாட்டிங்க.. கரெக்டா நிச்சயப் பத்திரிக்கை வாசிக்கிறப்ப இவன் காணாம போயி்ட்டான். அடுத்து நீங்க...  நீங்க இல்லைனு தெரிஞ்சவுடனே என் பையன் முகம் எப்படி வாடிப் போச்சு தெரியுமா .. இதுல சுஜிக்கு வேற உடம்பு முடியாம போயி" என முடிப்பதற்குள் " சுஜியா.. அவளுக்கு என்னாச்சு " என்று பதற்றமாக கேட்டான் கிருஷ்

"  உங்க அண்ணா ஃபீல் பண்ணானு சொன்னது இந்த பாசமலர் காதுல விழுகல. ஆனா சுஜினு சொன்னவுடனே ரோமியாக்கு காது கேட்ருச்சா.." என்றார் இந்திரா கேலியாக..

அவன் இன்று நிதானத்தில் இருந்திருந்தால் இந்திராவை வார்த்தையாலே மடக்கியிருப்பான்.. ஆனால் அவனிருக்கும் நிலைமையில்
வாயில் வார்த்தை வர மறுத்தது..

"  நீ சும்மா இரு இ்ந்து.. தம்பி புள்ளைங்க எல்லாரும் மாடில்ல தா இருக்காங்க நீங்க போயி பாருப்பா " என்றார் பருவதம்

ஒரே தாவலில் மொட்டை மாடியை அடைந்தவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனான் ..

பாலா நடுவில்  அமர்ந்திருக்க அவன் மடியில் அர்ஜூன் ஏதோ கதை பேசிய படி தலை வைத்துப் படுத்திருந்தான். மறுபுறம் கிருஷின் சுஜி அவன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

அவர்களிடமிருந்து சற்றுத்தள்ளி மகதியும் சுஜியும் எதையோ கதை அளந்து கொண்டிருந்தனர்..
அவர்கள் ஒருவரின் முகத்தில் கூட வருத்தத்தின் சாயல் சிறிதுமில்லை..

கிருஷ் என்னதான் தன் இடத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தாலும் அர்ஜூனுடனான பாலாவின் நெருக்கம் அவனை ஏதோ செய்தது.. அது என்ன மாதிரியான என்ற உணர்வினை அவனால் உணர முடியவில்லை..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now