நான் அவர்கி்ட்ட அவ்ளோ கம்ளெய்ன்ட் பண்ணியும் ஒரு வார்த்தை கிருஷ் தான் என்னோட தம்பின்னு சொன்னாரா..உன்ன மனசில எந்த இடத்துல வெச்சிருக்கானு தெரிஞ்சிக்க..நா ஒருத்தி ..நீ எப்படி இருந்தாலும் அவன பார்த்த உடனே எல்லாத்தயும் மறந்துட்டு பல்லக் காட்ட போற.. எதுக்குடி இந்த புலம்பல்..
அய்யோ இந்த கொலுந்தனார் வேற கூப்டாரே...உள்ள போனுமே..
ஏய் இதெல்லாம் உனக்கே ஓவரா தெரில.. போடி போ..
மே ஐ கம் இன் சார்..
ம்ம்.. மகதி இப்ப உனக்கு இந்த ஆபிஸ் பிடிச்சிருக்கா..என்றான் அமைதியாக..
ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்..
மகதி நீ எங்க வீட்ல போய் எங்க அம்மாகி்ட்ட இந்த பைல சைன் வாங்கிட்டு வா.. ரொம்ப அர்ஜென்ட்..
( ஐயோ அவர் இன்னைக்கு லீவ்னு சொன்னாரே.. நா போறப்ப வீட்ல இருந்தா என்ன பண்றது )
சார் அது வந்து..வேற யாரையாவதுஉஉஉஉஉஉ...என இழுத்தாள்..
நான் உங்கிட்ட போகறியா இல்லையானு கேக்கல..போகச் சொன்னேன்.. புரியுதா என்றான் சிறிது எரிச்சலுடன்
வேறு வழி இல்லாமல் சரி என்றாள்..
மகதி என் கார வேணும்னா யூஸ் பண்ணிக்க..
நோ தேங்க்ஸ் சார் .. பஸ்லயே போய்க்கிறேன் என்றாள் அதே கடுப்புடன்..
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
அம்மா ப்ளீஸ்மா இன்னும் ஒரே வாய் .. எனக்காக.. எனக் கெஞ்சிக் கொண்டு இருந்தான் பாலா..
டேய் போதும்டா.. இதுக்கே மூச்சு முட்டுது.. வேணான்டா.. என சொல்லிக் கொண்டே வீட்டயே ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டு இருந்தார் .. இந்திரா..
மா உங்களுக்காக நானே சமைச்சேன் பாருங்க.. போ இந்து.. என்கிட்ட பேசாத.. என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்...
அச்சோ என் பட்டுக்குட்டிக்கு வேற கோவம் வேற வந்திடுதே.. என அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சினார் இந்திரா..
ESTÁS LEYENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficción GeneralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..