ஹான் சொல்லுங்க சார்..என்றாள் மகதி..
இந்த பாட்டு நல்லாருக்குல... என்றான் நக்கலாக...அவள் முறைக்கவும் 'கிருஷ்
இப்ப சரியாக நடந்துகிறானா..'
என்று அவளைப் பார்த்து திரும்பிக் கேக்கவும் வழக்கம் போல் தன்னிலை மறந்து இஇஇஇஇ என்று இழித்து வைத்தாள்..இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன என வினவிய பாலாவின் கோப மொழிகளைக் கேட்டு...
" சார் நீங்க ஏன் அவர் உங்க தம்பினு சொல்லவே இல்ல " என்றாள்" ஹலோ மேடம் அன்னைக்கு ஹாஸ்பிடலயே இதத்தான் சொல்லாம்னு வந்தேன்.. நீ கால்ல சுடுதண்ணி கொட்ன மாறி என் சாரி எதுக்குனு கூட கேக்காம ஓடிட்ட " என்றான் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக் கொண்டு..
தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டு " சாரி சார் " என்றாள் பவ்யமாக..
" இந்த ஆட்டிங்லாம் வேணா.... எல்லாத்துக்கிட்டயும் ரவுண்ட் கட்டி சண்டைக்கு போற நீ.. என்னப் பார்த்தா மட்டும் ஏன் பயந்து போய் ஓடுற.. என்னப் பார்த்தா அவ்ளோ டெரராகவா இருக்கு.. " என்றான் சிரித்துக் கொண்டு..
அவன் சிரிப்பிலும் அவனது குரலிலும்
தன்னைமறந்து " நான் பதில் சொல்லித் தான் இந்த கேள்விக்கு ஆன்சர் புரியுமா என்ன.. அந்த அளவுக்கு நீங்க டியூப்ளைட்டா " என்றாள் சிறு புன்னகையுடன்.." என்ன உலற " என்றான் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தி விட்டு..
இப்போதுதான் தான் என்ன உளறி வைத்து இருக்கிறேன் என்பதை உணர்ந்த மகதி எப்படி இதை சமாளிப்பது என்பதை அறியாமல் திணறினாள்..
கைகளை பிசைந்த படியே சன்னலைப் பார்த்தவள் இது தன் ஆபிஸ் இருக்கும் ஏரியா என்பதை உணர்ந்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் " டிராப் பண்ணதுக்கு தேங்க்ஸ் சார்.." என்று சொல்லி விட்டு வழக்கம் போல தப்பித்தோம்.. பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தாள்..
' உனக்கு தான் மண்டைல மசாலா இல்லைனு தெரியும்ல.. அப்ரோம் எதுக்குடீ நீயேப் போயி வாலன்டிரா போய் அவமானப் பட்டுக்ற...ஒழுங்கா வாய வெச்சிட்டு அமைதியாயிருந்தா இன்னும் அவரோட ஒரு 5 நிமிசம் டைம் ஸ்பென்ட் பண்ணியிருக்கலாம்ல என நொந்து கொண்டவளை..
![](https://img.wattpad.com/cover/111627227-288-k466495.jpg)
VOUS LISEZ
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Fiction généraleHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..